மீண்டும் ரூ. 94,000 -யைக் கடந்த தங்கம் விலை!
இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்...
சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 640 உயர்ந்துள்ளது.
தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
இந்நிலையில் இன்று(புதன்கிழமை) 22 காரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 640 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 94,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ. 80 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,800-க்கு விற்பனையாகிறது.
Advertisement
Advertisement
அதே போல வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ஒரு கிராம் ரூ.176- க்கும், ஒரு கிலோ ரூ.1,76,000 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை மீண்டும் ரூ. 94,000-யைக் கடந்துள்ளது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த நவ. 18 ஆம் தேதி ரூ. 91,200 வரை தங்கம் விலை குறைந்தது குறிப்பிடத்தக்கது.
chennai gold rate today
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.