மலாக்கா ஜலசந்தி பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், சென்யார் புயலாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மலேசியா மற்றும் அதனையொட்டிய மலாக்கா ஜலசந்தி பகுதிகளின் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக நேற்று (நவ.25) வலுப்பெற்றது.
இந்த புயல் சின்னம், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்று நள்ளிரவு ஆழ்ந்த காற்றழுத்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.
இந்த நிலையில், இன்று காலை 5.30 மணி நிலவரப்படி சென்யார் புயலாக உருவாகியுள்ளது. இந்தப் புயலுக்கு ஐக்கிய அரபு அமீரகம் பரிந்துரைந்த சென்யார் என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இந்தப் புயல் அடுத்த 24 மணிநேரத்திற்கு தீவிரத்தைக் தக்கவைத்துக் கொண்டு, அதன் பின்னர் படிப்படியாக வலுவிழக்க வாய்ப்புள்ளது.
மேலும், மேற்குத் திசை நோக்கி நகர்ந்து, இன்று இந்தோனேசியா கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பின்னர், மேற்கு-தென்மேற்கு திசை நோக்கி நகர்ந்து, அடுத்த 48 மணி நேரத்தில் கிழக்கு திசை நோக்கி திரும்பக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்யார் புயலால் தமிழகத்திற்கு எந்தவித பாதிப்பு இல்லை என்று கூறப்படுகிறது.
அதே சமயத்தில், இலங்கை அருகே உருவாகும் மற்றொரு புயல், வடதமிழக கடற்கரையை நோக்கி நகரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.