கோவை: கோவை அருகே பிறந்த குழந்தை ஒன்றின் உடல் துண்டிக்கப்பட்ட நிலையில் வீசப்பட்ட கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம், கோவில்பாளையம் அருகே காளப்பட்டி - வீரியாம்பாளையம் சாலையில் புதிதாகப் பிறந்த குழந்தையின் உடல் பாகங்கள் சாலையோரத்தில் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தகவலின் பேரில் கோவில்பாளையம் போலீசார் விரைந்து சென்று பார்த்தபோது, பிறந்து சில மணி நேரமே ஆன குழந்தையின் கால்கள் நாய்களால் கடித்துத் துண்டிக்கப்பட்ட நிலையில் கிடந்தது. சில தகவல்களின்படி கைகளும் வெட்டப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது.
குழந்தையின் உடல் பாகங்களை கைப்பற்றிய போலீசார் உடல் கூராய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் உடல் கூராய்வுக்குப் பிறகே குழந்தையின் பாலினம் குறித்த தகவல் தெரிய வரும் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
மாரியம்மன் கோயில் அருகில் குழந்தையின் உடல் கிடைத்ததால் நரபலியாக இருக்கக்கூடும் அல்லது திருமணம் கடந்த உறவில் பிறந்ததால் வெட்டிக் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.
குழந்தையின் பெற்றோரை கண்டுபிடிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள போலீசார், குழந்தையின் உடல் பாகங்கள் கிடந்த இடத்தைச் சுற்றியுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
பட்டப் பகலில் சாலையோரம் குழந்தையின் உடல் பாகங்கள் வெட்டப்பட்ட வீசப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க..சென்னைக்கு 700 கி.மீ. தொலைவில் டிட்வா புயல்! வானிலை மையம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.