டிட்வா புயல், மழையால் நாளை(நவ.29) சென்னையில் இருந்து தூத்துக்குடி, மதுரை, புதுவை செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
சென்னையில் இருந்து நாளை செல்லவிருந்த 22 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுளளது. தென்மேற்கு வங்கக்கடலில் டிட்வா புயல் உருவாகியுள்ளது.
இந்த புயல் புதுச்சேரியை நோக்கி நகரும் என்றும் இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
குறிப்பாக நவ. 30 வரை, கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. தற்போது டிட்வா புயல் காரைக்காலுக்கு தென் கிழக்கில் 270 கி.மீ., புதுவைக்கு தென் கிழக்கில் 380 கி.மீ. தொலைவில் உள்ளது.
3 கி.மீ. வேகத்தில் நகர்ந்த புயலில் வேகம் அதிகரித்து 7 கி.மீ. வேகத்தில் வடக்கு வடமேற்கு திசையை நோக்கி நகர்கிறது. நவ.30 காலை வரை புயலாக தீவிர தன்மையை தக்கவைத்து அன்று மதியத்துக்குள் கடலிலேயே வலுவிழக்கும்.
பின்னர் தாழ்வு மண்டலமாக டிட்வா புயல் சென்னைக்கு தென் மேற்கே வங்கக்கடலை அடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.