சென்னையில் இருந்து செங்கோட்டையன் உள்ளிட்டோர் கோவை சென்ற இண்டிகோ விமானம் பெங்களூருவில் தரையிறக்கப்பட்டது.
சென்னையில் இருந்து வெள்ளிக்கிழமை பிற்பகல் 12.30 மணிக்கு இண்டிகோ விமானம் கோவை புறப்பட்டது. இந்த இண்டிகோ விமானத்தில் நேற்று தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் உள்பட நூற்றுக்கு மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.
விமானம் 1.40 மணிக்கு கோவை வரும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் ஆயிரக்கணக்கான தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்கள் அவரை வரவேற்பதற்காக திரண்டிருந்தனர். இந்நிலையில் கோவை வந்த இண்டிகோ விமானம் மோசமான வானிலை காரணமாக பெங்களூரு திருப்பி விடப்பட்டது.
பெங்களூரு விமான நிலையத்தில் தரை இறக்கப்பட்ட விமானத்தில் பயணிகள் அமர வைக்கப்பட்டு இருக்கின்றனர். பெங்களுரு விமான நிலையத்தில் பயணிகளுக்கு சிற்றுண்டி வழங்கப்பட்டு விமானத்திலேயே அமர வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த விமானத்தில் கோவை மாவட்ட திமுக நிர்வாகிகள் தொண்டாமுத்தூர் ரவி, தளபதி முருகேசன் ஆகியோரும் அமர்ந்துள்ளனர். கோவையில் வானிலை சரியானவுடன் பெங்களூருவில் இருந்து இண்டிகோ விமானம் கோவை வரும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே கோவை விமான நிலையத்தில் செங்கோட்டையனை வரவேற்பதற்கு உற்சாகமாக வந்த தவெக தொண்டர்கள் 3 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.