முகப்பு
தமிழ்நாடு

அரவக்குறிச்சியில் காதலியின் கழுத்தை அறுத்துவிட்டு, காதலன் தற்கொலை!

அரவக்குறிச்சி அருகே, காதலியின் கழுத்தை அறுத்துவிட்டு, காதலன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம்

Updated On : 29 நவம்பர், 2025 at 3:10 PM
தற்கொலை
பகிர்:
Updated On : 29 நவம்பர், 2025 at 3:07 PM

கரூர் : அரவக்குறிச்சி அருகே காதலியின் கழுத்தை அறுத்துவிட்டு, தற்கொலை செய்து கொண்ட காதலன் உயிரிழந்த நிலையில், கல்லூரி மாணவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே உள்ள வேலம்பாடி ரெங்கராஜ் நகரைச் சேர்ந்த அசோக்குமார் மகன் வசந்தகுமார்( 26). இவர் எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்தார்.

Updated On : 29 நவம்பர், 2025 at 3:08 PM

அதேப் பகுதியைச் சேர்ந்த மாற்று சமூகத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவரை கடந்த மூன்று ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளார்.

Advertisement

இந்நிலையில் இரு வீட்டாரும் திருமணத்துக்கு சம்மதிக்கவில்லை என்பதால் இருவரும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து சனிக்கிழமை காலை 10 மணியளவில் மாணவியின் வீட்டில் யாரும் இல்லை என அறிந்து, வசந்தகுமார் மாணவியின் வீட்டுக்குச் சென்று, பிளேடால் மாணவியை கழுத்தை அறுத்துவிட்டு, அவர் இறந்து விட்டார் எனக் கருதி அதே அறையில் சேலையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

சிறிது நேரத்தில் மாணவி மயக்கம் தெளிந்த நிலையில் எழுந்து, கதறி அழுதுள்ளார். இதனைக்கண்ட அக்கம் பக்கத்தினர் மாணவியை ரத்த வெள்ளத்தில் மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக அரவக்குறிச்சி போலீசாருக்கு அளிக்கப்பட்ட தகவல் அடிப்படையில் உயிரிழந்த வசந்தகுமாரின் உடலைக் கைப்பற்றி அரவக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு உடல் கூராய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On : 29 நவம்பர், 2025 at 3:09 PM

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.