கோப்புப்படம்.  
தமிழ்நாடு

டிட்வா புயலால் இதுவரை 3 பேர் பலி: அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன்

டிட்வா புயலால் தமிழகத்தில் இதுவரை 3 பேர் பலியாகியுள்ளதாக அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இணையதளச் செய்திப் பிரிவு

டிட்வா புயலால் தமிழகத்தில் இதுவரை 3 பேர் பலியாகியுள்ளதாக அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

டிட்வா புயலால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில் சென்னையில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆய்வு மேற்கொண்டு, சூழ்நிலை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசும்போது, டிட்வா புயலை பொருத்தவரை காரைக்கால் அருகே நிலைகொண்டு உள்ளது.

அது மெதுவாக நகர்ந்து வரும் நிலையில் மதியத்திற்கு மேல் அடுத்த கட்ட நகர்வுகளை தெரிவிப்பதாக வானிலை மையம் சொல்லியுள்ளது. புயல் எப்படி இருந்தாலும் அதை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். நேற்று இரவு 11 மணியளவில் துணை முதல்வர் பேரிடர் மேலாண்மை கட்டுபாட்டு அறை மற்றும் சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டு அறையையும் ஆய்வு செய்தார். இன்று காலையில் கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் பெரிய மழையை எதிர்பார்த்தோம்.

ஆனால் மழை குறைவாகதான் உள்ளது. சென்னையிலும் மழை குறைவாகதான் உள்ளது. இந்த புயலின் உண்மையான தாக்கத்தை மதியம் வானிலை மையம் அறிவித்த பின் தெரிவிப்போம். தமிழ்நாட்டில் குறிப்பிட்ட இந்த மாவட்டங்களில் 38 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு 2,391 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர் இலங்கையில் உள்ள தமிழர்களுடன் இன்றைக்கு காலையில் விமானம் புறப்படுவதற்கு தயாராக இருந்தது. ஆனால் வானிலை சரியாக இல்லாத காரணத்தால்தான் விமானம் புறப்பட முடியாமல் உள்ளது.

அனேகமாக இன்று இலங்கையில் உள்ள தமிழர்கள் தமிழ்நாட்டிற்கு வருவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன என எதிர்பார்க்கலாம். தூத்துக்குடியில் சுவர் இடிந்து ஒருவர் உயிரிழந்திருக்கிறார், தஞ்சாவூரில் சுவர் இணைந்து ஒருவர் உயிரிழந்திருக்கிறார், மயிலாடுதுறையில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்திருக்கிறார். நேற்று மாலைக்கு மேல் மூன்று பேர் உயிரிழந்திருக்கிறார்கள். தற்போது வரை மழையினால் கால்நடைகள் 149 உயிரிழந்துள்ளது, 234 குடிசை வீடுகள் சேதங்கள் ஏற்பட்டு பாதிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட்! தரைக்காற்று எச்சரிக்கை!

மீட்புக் குழுவினர் சென்னையில் 5 குழுவினரும் விழுப்புரத்தில் ஐந்து குழுவினரும் மீட்புப் பணியில் 1,185 படகுகள் தயார் நிலையில் உள்ளது. 56 ஆயிரம் ஹெக்டர் நிலங்கள் மழையால் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் 24 ஆயிரம், திருவாரூரில் 15,000, மயிலாடுதுறையில் 8,000 என விவசாய நிலங்கள் பாதிப்படைந்துள்ளது. மழை பாதிப்பு குறைந்த பின்னர் என்ன நடவடிக்கைகள் எடுக்கலாம் என்பதை முதல்வர் முடிவெடுப்பார் என்றார்.

Three people have lost their lives in rain-related incidents caused by Cyclone Ditwah in Tamil Nadu, Minister KKSSR Ramachandran said on Sunday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிபிஎல் இறுதிப் போட்டி: ஸ்டீவ் ஸ்மித் விக்கெட்டை வீழ்த்துவாரா புதிய பிரட் லீ?

தவெக செயல்வீரர்கள் கூட்டம் தொடங்கியது! விசில் அடித்து விஜய்க்கு வரவேற்பு!

குடியரசு நாள்: 44 காவல் துறை அதிகாரிகள், பணியாளர்களுக்கு சிறப்புப் பதக்கங்கள் அறிவிப்பு!

ஆம்னி பேருந்துகள் மோதி விபத்து: 3 பேர் பலி!

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வேண்டுமா? கடைசி வாய்ப்பு!

SCROLL FOR NEXT