கோப்புப்படம் 
தமிழ்நாடு

சென்னையில் இருந்து விமானங்கள் வழக்கம் போல் இயக்கம்!

சென்னை விமான நிலையத்தில் இருந்து விமானங்கள் வழக்கம் போல் இயக்கப்படுகிறது.

இணையதளச் செய்திப் பிரிவு

டிட்வா புயலின் வேகம் குறைந்ததையடுத்து, சென்னை விமான நிலையத்தில் இருந்து இயக்கப்படும் விமானங்கள், இன்று(நவ. 30) வழக்கம்போல் இயக்கப்படுகிறது.

டிட்வா புயல் பலத்த மழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் இருந்து மதுரை, திருச்சி, தூத்துக்குடி, சேலம் மற்றும் ஹைதராபாத், பெங்களூரு, இலங்கையின் யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு 27 புறப்பாடு விமானங்களும், 27 வருகை விமானங்களும் என மொத்தம் 54 விமானங்கள் சனிக்கிழமை அதிகாலையில் இருந்து நள்ளிரவு வரையில் ரத்து செய்யப்பட்டன.

புயல் ஞாயிற்றுக்கிழமை (நவ.30) காலை கரையைக் கடக்க கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இதன் காரணமாக ஞாயிற்றுக்கிழமை 2-ஆவது நாளாக சென்னை விமான நிலையத்தில் 36 உள்நாட்டு விமானங்கள், 11 சா்வதேச விமானங்கள் என மொத்தம் 47 விமானங்கள் ரத்து செய்யப்படும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டது.

டிட்வா புயலின் வேகமும், மழையும் குறைந்ததைடுத்து, சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடி, மதுரை, திருச்சிக்கு இயக்கப்படும் விமானங்கள் இன்று வழக்கம் போல் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சென்னை-யாழ்ப்பாணம் இடையே இயக்கப்படும் 2 விமானங்கள் மட்டும் இன்று (நவ.30) ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Flights from Chennai Airport are operating as usual.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வானில் சிறிய வகை விமானம்: மக்களுக்கு அச்சம் வேண்டாம்! - ஆட்சியா் தகவல்

பெண் காவலா் வீட்டில் 30 பவுன் நகைகள் திருட்டு

திமுக - காங்கிரஸ் இடையேயான நெருடல் மறைந்து போகும்: வைகோ பேட்டி

நடந்துசென்ற பெண்ணிடம் நகையைப் பறித்தவா் கைது

கடந்த ஆண்டில் 2.22 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு!

SCROLL FOR NEXT