சமூக வலைதளப் பக்கங்களில் தரக்குறைவாக பதிவிடும் திமுகவினர் ஏன் கைது செய்யப்படவில்லை என பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
கரூர் சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் பதிவிட்டதாக தவெக தோ்தல் பிரசார மேலாண்மை பொதுச் செயலா் ஆதவ் அா்ஜுனா உள்ளிட்ட சிலர் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ள நிலையில், தமிழிசை இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களுடனான சந்திப்பில் இது தொடர்பாக அவர் பேசியதாவது,
''அரசுக்கு எதிராக கருத்துகளைப் பதிவிடும் தவெகவினர் கைது செய்யப்படுகிறார்கள். அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படுகிறது.
தங்கள் கருத்துகளைப் பதிவிடுவோரை கைது செய்வது சரியல்ல. சமூக வலைதளங்களில் தரக்குறைவாகப் பதிவிடும் திமுகவினர் கைது செய்யப்பட்டுள்ளனரா? அவர்களை கைது செய்யாதது ஏன்? இது, அரசின் ஒருதலைபட்சமான செயலைக் காட்டுகிறது.
தவெகவுக்கு நேரம் கொடுப்பதிலும் இடம் கொடுப்பதிலும் காவல் துறை தொடக்கத்தில் இருந்தே தடுமாற்றத்துடன் இருந்திருக்கிறது. எத்தனை நாள் நீங்கள் வெறுப்பு அரசியல் செய்து கொண்டிருக்கப் போகிறீர்கள்?'' என தமிழிசை கேள்வி எழுப்பினார்.
இதையும் படிக்க | ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமாருக்கு காவல் துறை சம்மன்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.