கரூர் கூட்டநெரிசல் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரிய பாஜக கவுன்சிலரின் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்க மறுத்துள்ளது.
கரூர் கூட்டநெரிசல் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிடக் கோரி சென்னை மாநகராட்சி கவுன்சிலர் உமா ஆனந்த் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் வேல்முருகன் மற்றும் அருள் முருகன் அமர்வில் வெள்ளிக்கிழமை காலை விசாரணைக்கு வந்தது.
இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையை அணுகுமாறு மனுதாருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்துவிட்டனர்.
ஏற்கெனவே, கூட்ட நெரிசல் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மதுரை கிளையில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
கரூரில் கடந்த வாரம் சனிக்கிழமை இரவு நடைபெற்ற விஜய் பிரசாரத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலியாகினர். இதுதொடர்பாக விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் ஆணையத்தை தமிழக அரசு அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.