ENS
தமிழ்நாடு

தவெக தலைவர் விஜய்க்கான பாதுகாப்பு உயர்த்தப்படுகிறதா?

விஜய்க்கான பாதுகாப்பை அதிகரிக்க சிஆர்பிஎஃப் பரிந்துரை...

இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தலைவர் விஜய்க்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பை அதிகரிக்க மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு சிஆர்பிஎஃப் பரிந்துரைத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கரூா் வேலுச்சாமிபுரத்தில் கடந்த சனிக்கிழமை இரவு தவெக தலைவா் விஜய் பிரசாரம் மேற்கொண்டார். இந்த பிரசாரத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி தவெக தொண்டா்கள், பெண்கள், குழந்தைகள் என மொத்தம் 41 போ் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிா்வலையை ஏற்படுத்தியது.

தமிழக அரசால் நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபா் ஆணையம் இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகிறது.

மேலும் இதுதொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் நேற்று பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தது.

இதனிடையே கரூர் சம்பவம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை கேட்டிருந்தது. விஜய்க்கு போதிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்று தவெக தரப்பு கூறியிருந்தது.

விஜய்க்கு தற்போது ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில் அதற்கு அதிகமாக அதாவது ஒய் பிளஸ் அல்லது இஸட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படும் என்று தெரிகிறது.

இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படை பரிந்துரைத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

CRPF Recommendation to increase TVK Vijay's security

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜெர்மனியில் தடையை மீறி பறந்த ட்ரோன்களால் விமான சேவை கடுமையாக பாதிப்பு!

தனுஷ் - 54 படப்பிடிப்பு நிறைவு!

அரசு விருந்தினர் மாளிகையாக மாறுகிறதா ஷீஷ் மஹால்!

மே.இ.தீவுகளை வீழ்த்தி இன்னிங்ஸ் வெற்றி; முதல் டெஸ்ட்டில் இந்தியா அபாரம்!

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்

SCROLL FOR NEXT