விஜய்யை கைது செய்ய வேண்டிய நிலை வந்தால் கைது செய்வோம் என அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.
வேலூரில் செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த துரைமுருகன்,
"கரூர் வழக்கில் நீதிபதிகள் சொல்வதை கேட்டுக்கொண்டுதான் ஆக வேண்டும். ஆனால் உண்மையை சொல்லி இருக்கிறார்கள்.
அதிக தொகுதிகளில் வெல்வோம் என அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் சொல்வார்கள்.
ஒரு கட்சியின் தலைவர் அவரது கட்சிக்கேற்ப பேசுகிறார். கைது செய்ய வேண்டிய நிலை வந்தால் விஜய்யை கைது செய்வோம். தேவையில்லாமல் யாரையும் கைது செய்ய மாட்டோம்.
கரூர் விவகாரத்தில் யாரும் செந்தில் பாலாஜியை குறை சொல்லவில்லை.
கள்ளக்குறிச்சி விவகாரத்தில் முதல்வர் சம்பவ இடத்திற்கு செல்லாதது அன்றைய சூழ்நிலை வேறு. இன்று 41 பேர் இருந்திருப்பது அவ்வளவு சாதாரண விஷயமல்ல. உலகமே இதைப்பற்றி பேசுகிறது. அதனால் முதல்வர் உடனே சென்றிருக்கிறார்" என்று கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.