ஆயுத பூஜை தொடர் விடுமுறையையொட்டி, சொந்த ஊர் சென்ற தென் மாவட்ட மக்கள், சென்னை திரும்புவதற்கு வசதியாக இன்று(அக். 5) மாலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
திருநெல்வேலி-தாம்பரம் சிறப்பு ரயில்:
திருநெல்வேலியிலிருந்து இன்று (அக்.5 ஞாயிற்றுக்கிழமை) மாலை 4.50 மணிக்கு புறப்படும் இந்த முன்பதிவில்லாத அதிவிரைவு சிறப்பு ரயில் (எண் 06014) திங்கள்கிழமை அதிகாலை 3 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.
இதில் உட்காரும் இருக்கை வசதியுள்ள 11 பெட்டிகள், 4 பொது இரண்டாம் வகுப்புப் பெட்டிகள், 2 பொது இரண்டாம் வகுப்பு மாற்றுத்திறனாளி பெட்டிகள் ஆகியவை இடம் பெறும்.
இந்த ரயில், கோவில்பட்டி, சாத்தூா், விருதுநகா், மதுரை, சோழவந்தான், கொடைக்கானல் ரோடு, திண்டுக்கல், மணப்பாறை, திருச்சி, ஸ்ரீரங்கம், அரியலூர், விருத்தாசலம், விழுப்புரம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு ஆகிய நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னைக்கு முன்பதிவில்லாத மெமு சிறப்பு விரைவு ரயில்
மதுரையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணிக்குப் புறப்படும் மெமு விரைவு ரயில் திங்கள்கிழமை (அக்.6) காலை 6 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.
12 பெட்டிகள் இணைக்கப்பட்ட இந்த ரயில் சோழவந்தான், கொடைரோடு, அம்பாத்துறை, திண்டுக்கல், மணப்பாறை, திருச்சி, திருவெறும்பூர், பூதலூர், தஞ்சாவூர், பாபநாசம், கும்பகோணம், மயிலாடுதுறை, சீா்காழி, சிதம்பரம், கடலூர் துறைமுகம், பண்ருட்டி, விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய நிலையங்களில் நின்று செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: இன்று 12 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.