மருத்துவமனையிலிருந்து காரில் புறப்பட்டுச் சென்ற ராமதாஸ்  படம் - எக்ஸ்
தமிழ்நாடு

சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் ராமதாஸ்!

மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த பாமக தலைவர் ராமதாஸ் இன்று (அக். 7) வீடு திரும்பினார்.

இணையதளச் செய்திப் பிரிவு

சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் - தலைவர் ராமதாஸ் இன்று (அக். 7) வீடு திரும்பினார்.

சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் இதய பரிசோதனைக்காக ராமதாஸ் கடந்த 5ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார்.

அங்கு, மூத்த இருதய சிகிச்சை நிபுணர் மருத்துவர் செங்கோட்டுவேலு தலைமையிலான மருத்துவக் குழுவினர் ராமதாஸுக்கு பரிசோதனை செய்தனர். தொடர்ந்து முழு உடல் பரிசோதனையும் நடைபெற்றது.

இரு நாள்கள் ஓய்வுக்குப் பிறகு மருத்துவமனையிலிருந்து ராமதாஸ் இன்று வீடு திரும்பினார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ராமதாஸை முதல்வர் மு.க. ஸ்டாலின், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், அன்புமணி உள்ளிட்டோர் நேரில் சென்று நலம் விசாரித்தனர்.

இதையும் படிக்க | விஜய் வெளியில் வர பயந்துகொண்டிருக்கிறார்: துரைமுருகன்

Ramadoss returns home from the hospital

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மகளிர் உலகக்கோப்பை: வங்கதேசம் போராடி தோல்வி!

ஐசிசியின் சிறந்த வீராங்கனை விருதுக்கான போட்டியில் ஸ்மிருதி மந்தனா!

ஃபேப்டெக் டெக்னாலஜி பங்குகள் 4.55% சரிவுடன் நிறைவு!

ராதையின் மோகனம்... அனுபமா!

ஹெச்.டி. தேவெகெளடா மருத்துவமனையில் அனுமதி

SCROLL FOR NEXT