கோப்புப் படம் 
தமிழ்நாடு

பொறியியல் பணிகளால் ரயில் போக்குவரத்தில் மாற்றம்!

பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால், ரயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

விழுப்புரம் மாவட்டம், முண்டியம்பாக்கம் ரயில்வே யார்டில் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால், ரயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டத்துக்குள்பட்ட முண்டியம்பாக்கம் ரயில்வே யார்டில் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதன்காரணமாக பகுதியளவில் ரத்து, புறப்படும் இடம் மாற்றம் போன்றவை செயல்படுத்தப்படவுள்ளன.

சென்னை தாம்பரத்திலிருந்து காலை 9.45 மணிக்குப் புறப்படும் தாம்பரம் - விழுப்புரம் பயணிகள் ரயில் (வண்டி எண் 66045), அக்டோபர் 11,12 மற்றும் 14-ஆம் தேதிகளில் திண்டிவனம் - விழுப்புரம் இடையே பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால், இந்த ரயில் திண்டிவனம் ரயில் நிலையத்திலேயே நிறுத்தப்படும்.

விழுப்புரம் ரயில் நிலையத்திலிருந்து பிற்பகல் 1.40 மணிக்குப் புறப்பட வேண்டிய விழுப்புரம் - சென்னை கடற்கரைப் பயணிகள் ரயில் (வண்டி எண் 66046), விழுப்புரம் - திண்டிவனம் இடையே அக்டோபர் 11,12 மற்றும் 14-ஆம் தேதிகளில் பகுதியளவில் ரத்துசெய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த ரயில் திண்டிவனம் ரயில் நிலையத்திலிருந்து பிற்பகல் 2.25 மணிக்குப் புறப்படும்.

சென்னை எழும்பூரிலிருந்து பிற்பகல் 1.45 மணிக்குப் புறப்படும் எழும்பூர் - மதுரை வைகை அதிவிரைவு ரயில் (வண்டி எண் 12635) அக்டோபர் 14-ஆம் தேதி வசதிக்குரிய ரயில் நிலையத்தில் 30 நிமிடங்களும், சென்னை எழும்பூரிலிருந்து பிற்பகல் 12.30 மணிக்குப் புறப்படும் எழும்பூர் - தூத்துக்குடி சிறப்புக் கட்டண அதிவிரைவு சிறப்பு ரயில் (வண்டி எண் 06017) அக்டோபர் 14-ஆம் தேதி வசதிக்குரிய ரயில் நிலையத்தில் 110 நிமிடங்களும் நிறுத்தி வைக்கப்பட்டு, பின்னர் இயக்கப்படும்.

புதுச்சேரியிலிருந்து பிற்பகல் 1.30 மணிக்குப் புறப்படும் புதுச்சேரி - காக்கிநாடா துறைமுக கிர்கார் விரைவு ரயில் (வண்டி எண் 17656) அக்டோபர் 11,14 -ஆம் தேதிகளில் வசதிக்குரிய ரயில் நிலையத்தில் 75 நிமிடங்களும், புதுச்சேரியிலிருந்து பிற்பகல் 1 மணிக்குப் புறப்படும் புதுச்சேரி - கச்சிக்குடா விரைவு ரயில் (வண்டிஎண் 17654) அக்டோபர் 12,14 ஆம் தேதிகளில் வசதிக்குரிய ரயில் நிலையத்தில் 85 நிமிடங்களும், திருநெல்வேலியிலிருந்து அதிகாலை 3 மணிக்குப் புறப்படும் திருநெல்வேலி - புரூலியா அதிவிரைவு ரயில் (வண்டி எண் 22606), அக்டோபர் 11-ஆம் தேதி வசதிக்குரிய ரயில் நிலையத்தில் சுமார் 35 நிமிடங்களும் நிறுத்தி வைக்கப்பட்டு, பின்னர் இயக்கப்படும் என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | உள்ளூர் செய்தியாளர்களிடம் சிறப்பு புலனாய்வுக்குழு தீவிர விசாரணை!

Changes in train traffic due to engineering work

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தில் ரூ.1,000 கோடி முதலீடு செய்யும் டெய்கின்!

நீதிபதியை தாக்குவதா?வழக்குரைஞர் மீது கடும் நடவடிக்கை எடுக்க கார்கே வலியுறுத்தல்!

பிளாக் நூடுல்ஸ்... நிகிதா தத்தா!

என்னவென்று சொல்வதம்மா... ராஷி சிங்!

பத்திரிகையாளர் சந்திப்பில் காந்தார படக்குழுவினர் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT