கரூர் கூட்ட நெரிசல் பலி வழக்கு தொடர்பாக தவெகவின் கரூர் மாவட்ட செயலாளர் மதியழகனை போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
கரூரில் தவெக தலைவர் விஜய் தலைமையிலான பிரசாரக் கூட்டத்தில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் தொடர்பான வழக்கில், தவெகவின் கரூர் மாவட்ட செயலாளர் மதியழகனை போலீஸ் காவலில் விசாரிக்க கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் அனுமதியளித்தது.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, மதியழகனை அம்மாவட்ட காவல்துறை கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இதனைத் தொடர்ந்து, அவரை போலீஸ் காவலில் விசாரிக்க கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஐஜி அஸ்ரா கர்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழு மனு தாக்கல் செய்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், மதியழகனை 2 நாள் போலீஸ் விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு அனுமதி அளித்தது.
இருப்பினும், மதியழகனை விசாரிக்க சிறப்புப் புலனாய்வுக் குழுவுக்கு அனுமதியளிக்கக் கூடாது என்று மதியழகன் தரப்பு வழக்குரைஞர் வாதாடினார்.
இதையும் படிக்க: கை நம்மைவிட்டு போகாது; புது அடிமையைத் தேடும் பாஜக! உதயநிதி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.