சிறப்புப் பேருந்துகள் (கோப்புப்படம்) 
தமிழ்நாடு

தீபாவளி: கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படும் சிறப்புப் பேருந்துகள் விவரம்!

கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படும் பேருந்துகள் விவரம் தொடர்பாக...

தினமணி செய்திச் சேவை

தீபாவளி பண்டிகையையொட்டி, கும்பகோணம் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் இயக்கப்படும் சிறப்புப் பேருந்துகள் குறித்து நிர்வாக இயக்குநர் கே. தசரதன் தகவல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கே. தசரதன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (கும்பகோணம்) லிட்., மூலமாக பொதுமக்கள் எளிதாக எவ்வித சிரமம் இன்றி, இடையூறும் இன்றி, பயணம் செய்ய ஏதுவாக சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து திருச்சி, பெரம்பலூர், துறையூர், கரூர் புதுக்கோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம் மற்றும் மதுரை செல்லும் பேருந்துகள் செல்லும் பேருந்துகள் (நடைமேடை எண் -5-லும்), கும்பகோணம் தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, மன்னார்குடி, நன்னிலம், நாகப்பட்டினம். காரைக்கால், வேளாங்கண்ணி, மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி மற்றும் வேதாரண்யம் செல்லும் பேருந்துகள் (நடைமேடை எண் -7-லும்), அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் செல்லும் பேருந்துகள் (நடைமேடை எண் -8-லும்) ஆகிய ஊர்களுக்கு அக். 16 அன்று 82 கூடுதல் பேருந்துகளும், அக். 17 அன்று 702 கூடுதல் பேருந்துகளும், அக். 18 அன்று 652 கூடுதல் பேருந்துகளும், அக். 19 அன்று 252 கூடுதல் பேருந்துகளும் இயக்கப்படும்.

மேலும், திருச்சியிலிருந்து தஞ்சாவூர், கும்பகோணம், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, மதுரை ஆகிய ஊர்களுக்கும். மேலும், மதுரை, கோயம்புத்தூர். திருப்பூர் ஊர்களிலிருந்து திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய ஊர்களுக்கும் மற்றும் கும்பகோணம் போக்குவரத்து கழக இயக்க பகுதிக்கு உள்பட்ட அனைத்து முக்கிய நகரங்களுக்கு அக். 16 அன்று 150 கூடுதல் பேருந்துகளும், அக். 17,18,19 ஆகிய நாள்களில் 900 கூடுதல் பேருந்துகளும் இயக்கப்படும்.

அனைத்து முக்கிய நகரங்களிலிருந்து அனைத்து நகர் பேருந்துகளும் பயணிகளின் பயன்பாட்டுற்கு ஏற்ப இயக்க விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், தீபாவளி முடிந்து திரும்ப அவரவர் ஊர்களுக்கு செல்ல அக். 21,22,23 ஆகிய 3 நாள்களில் கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பயணிகள் வசதிக்காக கீழ்குறிப்பிட்ட ஊர்களுக்கு செல்லும் பேருந்துகளுக்கு முன்பதிவு வசதி செய்யப்பட்டு வருகிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Details of buses operating from Kalampakkam

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வீட்டில் பதுக்கிய 11 மூட்டை குட்கா பறிமுதல்

முதல்வா் கோப்பை: வாலிபாலில் சென்னைக்கு தங்கம்

லக்மே ஃபேஷன் வீக் 2025

விவசாயக் கடன்களை உரிய காலத்தில் செலுத்தினால் வட்டியை அரசே ஏற்கும்: திருவண்ணாமலை ஆட்சியா் தகவல்

இன்று ஸ்ரீ கோடி தாத்தா சாமி குரு பூஜை

SCROLL FOR NEXT