எடப்பாடி பழனிசாமியை தவெக தொண்டர்கள் விரும்புகிறார்கள் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
மதுரை மேற்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட விளாங்குடி பகுதியில் புதிதாக கட்டமைக்கப்பட்ட நியாய விலைக் கடை மற்றும் அங்கன்வாடி மையத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், எடப்பாடி பழனிசாமி பிரசாரக் கூட்டத்தில் தவெக கொடியைக் காட்டுகிறார்கள். விஜய்க்காக குரல் கொடுத்தது எடப்பாடி பழனிசாமி. யாருமே எந்த அரசியல் தலைவர்களும் எங்களுக்காக குரல் கொடுக்கவில்லை.
எங்களுக்காக குரல் கொடுத்து எங்கள் சூழ்நிலையை எடுத்துச் சொன்னவர் எடப்பாடி பழனிசாமி. எனவே அவர் வந்ததால் நாங்கலாம் வந்து கொடியைக் காட்டினோம் என்று தவெக தொண்டர்கள் கூறுகிறார்கள். எடப்பாடி பழனிசாமியை தவெக தொண்டர்கள் விரும்புகிறார்கள். அதனால்தான் தன்னெழுச்சியாக கட்சி கொடியைக் காட்டுகிறார்கள். தனக்கு ஒரு பழம் கிடைக்கவில்லை என்றால் அந்த பழம் புளிக்கும் என சொல்வார்கள். அதுபோல தான் விஜய்யின் ஆதரவு கிடைக்காததால் டிடிவி அதிமுக குறித்து விமர்சிக்கிறார்.
தரம் தாழ்ந்து போகக்கூடிய கட்சி எங்கள் கட்சி கிடையாது. அதிமுக தொண்டர்கள் யாராவது அடுத்த கட்சியின் கொடியை தூக்கியதாக வரலாறு உள்ளதா? கூட்டணியில் சேர்ந்தால் தோள் கொடுப்போம், தோலில் தூக்கிக் கொண்டாடுவோம். அதிமுக பன்மடங்கு நன்றாக இருக்கிறது. ஒரு தொதியில் லட்சக்கணக்கான மக்கள் கூடுகிறார்கள். விசிக வன்முறை இயக்கத்தோடு சேர்ந்து விட்டது. விஜய் கட்சியில் கட்டுக்கோப்பு வேண்டும் என்று சொல்கிறார்.
தன்னுடைய கட்சி தொண்டர்களையும் நிர்வாகிகளையும் திருமாவளவன் கண்டிக்க வேண்டும். சேர்ந்த இடம் அப்படி திமுக எப்படியோ அப்படித்தான் விசிகவும் இருப்பார்கள். எம்ஜிஆர் என்றால் ஒரு கெத்து தலைவருக்கு இணை யாரும் கிடையாது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.