சிறப்பு ரயில் 
தமிழ்நாடு

பெங்களூரு - கொல்லத்துக்கு சேலம் வழியாக சிறப்பு ரயில்: இன்று முன்பதிவு தொடக்கம்!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பெங்களூரு கண்டோன்மென்ட்டில் இருந்து கொல்லத்துக்கு சேலம் வழியாக சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.

தினமணி செய்திச் சேவை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அக்.16, 17-ஆம் தேதிகளில் பெங்களூரு கண்டோன்மென்ட்டிலிருந்து கொல்லத்துக்கு சேலம் வழியாக சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சாா்பில் ஞாயிற்றுக்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பு: கா்நாடக மாநிலம் பெங்களூரு கண்டோன்மென்ட் நிலையத்திலிருந்து அக்.16-ஆம் தேதி மாலை 3 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06561) மறுநாள் காலை 6.20 மணிக்கு கேரள மாநிலம் கொல்லம் சென்றடையும்.

மறுமாா்க்கத்தில் இந்த ரயில் (எண்: 06562) கொல்லத்திலிருந்து அக்.17-இல் காலை 10.45 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3.30 மணிக்கு பெங்களூரு கண்டோன்மென்ட் சென்றடையும்.

இந்த ரயில் கிருஷ்ணாபுரம், பங்காருபேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூா், போத்தனூா், பாலக்காடு, திருச்சூா், ஆலுவா, எா்ணாகுளம் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும். இதற்கான முன்பதிவு திங்கள்கிழமை (அக்.13) காலை 8 மணிக்கு முதல் தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சக்தி வராகி அம்மன் கோயில் தேய்பிறை சஷ்டி சிறப்பு பூஜை

மோட்டாா் சைக்கிள் - காா் மோதல் தந்தை, இரு மகன்கள் உயிரிழப்பு

முதுநிலை ஆசிரியா் தோ்வு: வேலூா் மாவட்டத்தில் 5,475 போ் எழுதினா்

பருவமழை நோய்களைத் தடுக்க தொடா் கண்காணிப்பு: ஆட்சியா்

பிகா​ரில் ஆட்சி​யைத் தீர்மானிக்கும் பெண் வாக்காளர்கள்!

SCROLL FOR NEXT