அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மணிகளைத் தேக்கமின்றி கொள்முதல் செய்யக் கோரி மன்னார்குடி அடுத்த கோட்டூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்(சிபிஐ சார்பு) சார்பில் சாலை மறியல் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கோரிக்கைகள்
கொள்முதல் நிலையங்களில் தேங்கிக் கிடக்கும் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகளைத் தேக்கமின்றி உடனடியாக கொள்முதல் செய்திட வேண்டும். கொள்முதல் செய்யும் நெல் மூட்டைகளைச் சேமிப்பு கிடங்குகளுக்கு உடனுக்குடன் அனுப்பிவைக்க வேண்டும். சேமிப்புக் கிடங்குகளில் நெல் மூட்டைகளை இறக்கக் கொள்முதல் நிலையங்களில் உள்ள ஊழியர்களைப் பயன்படுத்தக்கூடாது. ஈரப்பதம் சதவிகிதம் 17லிருந்து 22 உயர்த்தி கொள்முதல் செய்திட வேண்டும். கொள்முதல் நிலையங்களில் தட்டுப்பாடு இன்றி சாக்குகளை வழங்க வேண்டும். நாள் ஒன்றுக்கு 800 சிற்பம் என்ற அளவிலிருந்து உயர்த்தி 1000-க்கு மேல் கொள்முதல் செய்திட வேண்டும்.
கோட்டூர் கடை வீதியில் நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் ஒன்றியத் தலைவர் கே. எம். அறிவுடைநம்பி தலைமை வகித்தார். ஒன்றியச் செயலர் பி.செளந்தர்ராஜன், ஒன்றிய பொருளாளர் எம்.ஆர்.முருகேசன் முன்னிலை வகித்தனர்.
கோரிக்கைகளை விளக்கி, சிபிஐ ஒன்றியச் செயலர் எம்.செந்தில்நாதன், ஒன்றியக்குழு முன்னாள் தலைவர் என்.மணிமேகலை ,கட்சியின் துணைச் செயலர்கள் பி.பரந்தாமன், எம்.சிவசண்முகம் பேசினார். இதில், நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டு சாலையில் அமர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு வந்த, டிஎன்சிஎஸ்சி கோட்ட மேலாளர் ரவிச்சந்திரன், மன்னார்குடி வட்டாட்சியர் என். கார்த்திக், கோட்டூர் காவல் ஆய்வாளர்(பொ) கழனியப்பன் ஆகியோர் விவசாய சங்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து சாலை மறியல் விலக்கிக்கொள்ளப்பட்டது. இதனால், போக்குவரத்து ஒரு மணி மேலாக முற்றிலும் தடைப்பட்டது.
இதையும் படிக்க: கரூர் பலி: சிபிஐ விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.