முகப்பு
கரூர் பலி
தமிழ்நாடு

கரூர் பலி: நியாயமான, பாரபட்சமற்ற விசாரணை மக்களின் உரிமை! உச்ச நீதிமன்றம்

நியாயமான விசாரணை மக்களின் உரிமை என்று உச்சநீதிமன்றம் கருத்து...

தமிழ்நாடு

கரூர் பலி: நியாயமான, பாரபட்சமற்ற விசாரணை மக்களின் உரிமை! உச்ச நீதிமன்றம்

நியாயமான விசாரணை மக்களின் உரிமை என்று உச்சநீதிமன்றம் கருத்து...

Updated On : 13 அக்டோபர், 2025 at 5:37 AM
கரூர் பலி
பகிர்:

கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் நியாயமான, பாரபட்சமற்ற விசாரணை என்பது மக்களின் உரிமை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கரூரில் நடைபெற்ற தவெக கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலியான சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம் அமைத்த சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு எதிராகவும், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரியும் தவெக மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் முறையிடப்பட்டிருந்தது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் ஜே.கே. மகேஸ்வரி, என்.வி. அஞ்சாரியா ஆகியோா் அடங்கிய அமா்வு இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

சிபிஐ விசாரணையை முன்னாள் உச்ச நீதிமன்றம் நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் மூன்று பேர் கொண்ட குழு கண்காணிக்கும் என்றும், இந்த கண்காணிப்புக் குழுவில் தமிழ்நாடுப் பிரிவைச் சேர்ந்த இரண்டு ஐபிஎஸ் அதிகாரிகள் இடம்பெற வேண்டும் என்றும், ஆனால் அவர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கக் கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தீர்ப்பு குறித்து நீதிபதிகள் குறிப்பிடுகையில், ”குடிமக்களின் அடிப்படை உரிமைகள் சார்ந்ததாக இந்த வழக்கை கருதுகிறோம். நியாயமான, பாரபட்சமற்ற விசாரணை என்பது மக்களின் உரிமை” எனத் தெரிவித்தனர்.

summary

Karur stampede: People's right to fair, impartial trial! Supreme Court

முழு கட்டுரையைப் படிக்க →