சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்!
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்...
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
இந்தியா முழுவதுமே அண்மையில் வெடிகுண்டு மிரட்டல்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக பள்ளிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வருகிறது. அதேநேரத்தில் சோதனையில் அது புரளி எனத் தெரிய வருகிறது.
அந்த வகையில் தமிழகத்திலும் நீதிமன்றங்கள், முக்கிய பிரமுகர்களின் வீடுகள், அரசு அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் நாள்தோறும் வந்த வண்ணம் இருக்கின்றன.
Advertisement
Advertisement
இன்று(செவ்வாய்க்கிழமை) சென்னை நீலாங்கரையில் உள்ள நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டுக்கு மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
சீமான் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக டிஜிபி அலுவலகத்திற்கு மின்னஞ்சல் வந்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து மோப்ப நாய் உதவியுடன் போலீஸார், வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்ட நிலையில் அது புரளி என தெரிய வந்துள்ளது.
Bomb threat to NTK Leader Seeman's house
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.