தமிழ்நாடு

தீபாவளி திருநாள்: 2 மணிநேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி!

தீபாவளி திருநாளில் காலை 6 முதல் 7 மணிவரையிலும், இரவு 7 முதல் 8 மணிவரையிலும் பட்டாசு வெடிக்க அனுமதி

இணையதளச் செய்திப் பிரிவு

தீபாவளி திருநாளில் காலை, இரவு என இருவேளை சேர்த்து இரு மணிநேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

அக்டோபர் 20 ஆம் தேதியில் தீபாவளி திருநாள் கொண்டாடப்படவுள்ள நிலையில், அன்றைய நாளில் காலை 6 முதல் 7 மணிவரையிலும், இரவு 7 முதல் 8 மணிவரையில் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுகுறித்த அறிவிக்கையில் தமிழக அரசு கூறியதாவது, உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், தமிழ்நாடு அரசு 2018 ஆம் ஆண்டிலிருந்து தீபாவளி பண்டிகையன்று காலை 6 முதல் 7 மணி வரையும், இரவு 7 முதல் 8 மணி வரையில் மட்டுமே ஒலிஎழுப்பும் பட்டாசுகளை வெடிப்பதற்கு நேரம் நிர்ணயம் செய்து அனுமதி வழங்கியது.

இந்த ஆண்டும் தீபாவளி பண்டிகை தினத்தன்று, கடந்த ஆண்டைப் போலவே காலை 6 முதல் 7 மணி வரையிலும், இரவு 7 முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், பாதுகாப்பாக பட்டாசு வெடிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க: டாஸ்மாக் விவகாரம்! அமலாக்கத் துறைக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி!

Diwali: TN Govt allows 2 hours for crackers

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஸ்பேஸ்-எக்ஸின் 11-ஆவது ராக்கெட் சோதனை வெற்றி

சிறப்பு குழந்தைகளுக்கு புத்தாடை வழங்கிய எம்எல்ஏ

பாலியல் வழக்கில் 2 ஆண்டுகள் தலைமறைவு! வட மாநிலத் தொழிலாளி அஸ்ஸாமில் கைது!

பட்டாசுகளைப் பதுக்கிய இருவா் கைது

ஆங்கிலேயா் காலத்தில் கட்டப்பட்ட பாலத்தைச் சீரமைக்கக் கோரிக்கை!

SCROLL FOR NEXT