டி.ஆர்.பி.ராஜா  கோப்புப்படம்.
தமிழ்நாடு

ஃபாக்ஸ்கான் நிறுவன முதலீடு உறுதியானது

ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் முதலீடு உறுதி செய்யப்பட்ட ஒன்று என தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திச் சேவை

ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் முதலீடு உறுதி செய்யப்பட்ட ஒன்று என தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.

ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் முதலீடு தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்த கருத்துகளுக்குப் பதிலளித்து, எக்ஸ் தளத்தில் அமைச்சர் ராஜா செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவு: ஃபாக்ஸ்கான் நிறுவனம் தமிழ்நாட்டில் ரூ.15,000 கோடி முதலீடு செய்து 14,000 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்தது என்பது நூறு விழுக்காடு உண்மையான செய்தி. இது ஏறத்தாழ ஓராண்டு போராட்டத்துக்குப் பிறகு உறுதி ஆகியிருக்கும் வேலைவாய்ப்புகள்.

ஒரு திட்டம் வேலைவாய்ப்புகளாக மாறும் என்று அரசுக்கு முழுமையான நம்பிக்கை வந்த பிறகே அதை துறையோ அல்லது நானோ உறுதி செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறோம்.

நடப்பு உலகளாவிய வர்த்தகச் சூழல் தெரியாமல் யார் எதற்காக எதைச் சொல்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ளாமல் அல்லது புரிந்துகொள்ள முடியாமல் அல்லது புரிந்துகொண்டே நடிப்பவர்களுக்கு நாம் எதையும் சொல்ல முடியாது என்று தனது பதிவில் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இதெல்லாம் சின்ன விஷயங்கள்... திவ்யா உர்துகா!

பூமியில் நாளொன்றுக்கு 5 செயற்கைக் கோள்கள் விழும்! விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

மேகம், மலை, நீர், நிலம்... ஷாமா சிக்கந்தர்!

மக்களுக்குப் பிடித்த சின்ன திரை நடிகை! விருது வென்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் ராஜி!

அஞ்சான் மறுவெளியீட்டுத் தேதி!

SCROLL FOR NEXT