தன்னை எதிர்த்து பேரவை வளாகத்திலேயே அன்புமணி ஆதரவு எம்எல்ஏ-க்கள் தர்னாவில் ஈடுபட்டதற்கு பாமக குழுத் தலைவர் ஜி.கே.மணி வேதனை தெரிவித்தார்.
அவரை குழுத் தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டுமென பேரவைத் தலைவரிடம் அன்புமணி ராமதாஸ் தரப்பு எம்எல்ஏ-க்கள் வெங்கடேஸ்வரன், சிவகுமார், சதாசிவம் ஆகியோர் கடிதம் அளித்திருந்தனர். இந்தக் கடிதத்தின் மீது எந்த முடிவும் எடுக்கப்படாத நிலையில், பேரவை வளாகத்தில் ஜி.கே.மணிக்கு எதிராக மூன்று பேரும் தரையில் அமர்ந்து தர்னாவில் ஈடுபட்டனர். ஜி.கே.மணியை பாமக குழுத் தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டுமெனக் கோரினர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே.மணி, மூன்று பேரின் போராட்டம் மிகவும் துரதிருஷ்டவசமானது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.