ஆந்திரத்தில் கூகுள் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு மையம் (ஏ.ஐ.) அமையவுள்ளதை தேமுதிக பொதுச்செயலர் பிரேமலதா விஜயகாந்த் வரவேற்றுள்ளார்.
இது குறித்து அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: ஆந்திரத்தில் கூகுள் பிரம்மாண்டமாக ஏ.ஐ. மையத்தை அமைக்க ஒப்பந்தம் கையொப்பமாகியுள்ளது. கூகுள் ஏ.ஐ. மையம் அமைவது இந்தியாவுக்கு வரப்பிரசாதமாகும். இந்திய வளர்ச்சிக்கும், உலக அளவில் இந்தியா வல்லரசாக உருவெடுக்கவும் இது உதவும். அமெரிக்காவை தவிர்த்து முதல் முறையாக வெளிநாட்டில் கூகுள் பெரிய அளவில் முதலீடு செய்திருப்பதால், இந்தியாவின் பொருளாதாரம் வேகம்பெறும் .
விசாகப்பட்டினத்தில் ரூ.1.33 லட்சம் கோடியில் ஏ.ஐ. மையம் அமைக்கப்படுவதால் பல லட்சம் இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறுவர். ஆந்திரம் போல, தமிழகத்திலும் இதுபோன்ற வாய்ப்பை உருவாக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார் பிரேமலதா விஜயகாந்த்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.