3000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் ஹிட்டாச்சி நிறுவனத்துடன் ஒப்பந்தம்.  
தமிழ்நாடு

3000 பேருக்கு வேலை... ஹிட்டாச்சி நிறுவனத்துடன் ஒப்பந்தம்!

3000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் ஹிட்டாச்சி நிறுவனத்துடன் ஒப்பந்தம்.

இணையதளச் செய்திப் பிரிவு

சென்னை, போரூரில் ரூ. 2000 கோடி முதலீட்டில்
3000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் ஹிட்டாச்சி நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்
முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது.

முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில், இன்று (அக். 15) தலைமைச் செயலகத்தில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்வில், 5 ஆண்டுகளில், 2000 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 3000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், சென்னை போரூரிலுள்ள ஹிட்டாச்சி குழுமத்தைச் சேர்ந்த ஹிட்டாச்சி எனர்ஜி டெக்னாலஜி சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் உலகளாவிய தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க மையத்தின் விரிவாக்க திட்டத்திற்கான  புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.   

ஹிட்டாச்சி எனர்ஜி டெக்னாலஜி சர்வீசஸ் நிறுவனம்

ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஹிட்டாச்சி குழுமம், உலகளாவிய ஃபார்ச்சூன் (Global Fortune) 500 நிறுவனங்களில் ஒன்றாக இருந்து வருகிறது.   அதன் துணை நிறுவனங்களில் ஒன்றானது, ஹிட்டாச்சி எனர்ஜி டெக்னாலஜி சர்வீசஸ் நிறுவனம். அந்நிறுவனத்தின் உலகளாவிய தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க மையத்தை,   கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சென்னை, போரூரில் முதல்வர் ஸ்டாலின் தொடக்கி வைத்தார்.

அதன் தொடர்ச்சியாக, இன்றைய நாள், தமிழ்நாடு முதல்வர் முன்னிலையில் 5 ஆண்டுகளில், ரூ. 2000 கோடி முதலீடு மற்றும் 3000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், சென்னை போரூரிலுள்ள ஹிட்டாச்சி எனர்ஜி டெக்னாலஜி சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் உலகளாவிய தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க மையத்தின் விரிவாக்க திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.  

இந்நிகழ்ச்சியில், தொழில், முதலீட்டு ஊக்குப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, தலைமைச் செயலாளர், நா. முருகானந்தம், தொழில், முதலீட்டு ஊக்குப்பு மற்றும் வர்த்தகத் துறை செயலாளர் அருண் ராய், ஹிட்டாச்சி நிறுவனத்தின் உலகளாவிய தலைமைச் செயல் அலுவலர் ஆண்ட்ரியாஸ் ஷீரன்பெக், ஹிட்டாச்சி இந்தியா நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் வேணு நுகரி மற்றும் அந்த நிறுவனத்தின் உயர் அலுவலர்கள், அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Agreement with Hitachi to provide employment to 3000 people.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டெல்டா பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு குறைப்பு

கரூா் சம்பவம்: உயிரிழந்தவா்களின் குடும்பத்துக்கு சரத்குமாா் ஆறுதல்

புகையிலை தடுப்பு விளம்பரப் பதாகை வைக்காத கடைகளுக்கு அபராதம்

சேதமடைந்த கருமேனி ஆற்று கால்வாய்களை சீரமைக்க விவசாயிகள் வலியுறுத்தல்

கடலூா் மாவட்டத்தில் பரவலாக மழை

SCROLL FOR NEXT