ஜிஎஸ்டி சாலை EPS
தமிழ்நாடு

தீபாவளி: சென்னை பயணிகளுக்கு... சிறப்பு ரயில், சாலை வழித்தட விவரங்கள்!

சென்னை பயணிகளுக்கு சிறப்பு ரயில், சாலை வழித்தட விவரங்கள்...

இணையதளச் செய்திப் பிரிவு

தீபாவளி பண்டிகையொட்டி சென்னை பயணிகளுக்கு தாம்பரம் காவல்துறையினர் முக்கிய அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளனர்.

தீபாவளி பண்டிக்கையொட்டி, சென்னையில் இருந்து நாளைமுதல் லட்சக்கணக்கான மக்கள் சொந்த ஊர்களுக்கு பயணிக்க திட்டமிட்டுள்ளனர்.

அவர்களின் பெரும்பாலானோர் அக். 21 மற்றும் 22 ஆம் தேதிகளில் மீண்டும் சென்னை திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், தாம்பரம் காவல்துறையினர் முக்கிய அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளனர்.

அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

”அக்டோபர் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில், விடுமுறை முடித்து நகரத்திற்குள் திரும்பும் பயணத்தை விரைவுப்படுத்த, காட்டாங்குளத்தூர், மறைமலைநகர் மற்றும் பொத்தேரி ரயில் நிலையங்களிலிருந்து, கூடுதல் புறநகர் இரயில்கள் இயக்கப்படுவதால், பயணிகள் இந்த ரயில் சேவைகளைப் பயன்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், சீர்காழி, நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களுக்குப் பயணிக்கும் பயணிகள், நெரிசலற்ற பயணத்திற்காக ஓஎம்ஆர் மற்றும் ஈசிஆர் வழித்தடங்களைப், பயணிகள் புறப்பாடு மற்றும் திரும்பி வருதல் பயணத்திற்கு பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ரயில் போக்குவரத்து ஏற்பாடுகள்

சாலை நெரிசலைத் தவிர்க்க, சிறப்பு உள்ளூர் ரயில்கள் வழக்கமான இடைவெளியில் இயக்கப்படும். பயணிகள் இவற்றை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

பேருந்து ஏற்பாடுகள்

பயணிகள் வசதிக்காக, கிளாம்பாக்கம், கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்திலிருந்து (2,092) சிறப்புப் பேருந்துகள், 16.102025 முதல் 19.10.2025 வரை இயக்கப்பட உள்ளது.

எனவே, சீரான போக்குவரத்திற்காக, வாகன ஓட்டிகள் தாம்பரம் மாநகர போக்குவரத்துக் காவல்துறையினருடன் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Diwali: Special train and road route details for Chennai passengers

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 75 காசுகள் உயர்ந்து ரூ.88.06 ஆக நிறைவு!

கால்பந்து - கிரிக்கெட் சங்கமம்: லிவர்பூல் வீரரை மீன்குழம்புடன் வரவேற்கும் சஞ்சு சாம்சன்!

நோக்கு வர்மம்... கேதரின் தெரசா!

ஐஏஎஸ் அதிகாரிகள் விளக்கம் அளித்தது ஏன்? - அமைச்சர் ரகுபதி!

உங்கள் துணையுடன் மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா? இந்த 5 விஷயங்கள் போதும்!!

SCROLL FOR NEXT