ஆளுநர் ஆர்.என். ரவி / முதல்வர் மு.க. ஸ்டாலின் கோப்புப் படங்கள்
தமிழ்நாடு

சித்த மருத்துவ பல்கலை. மசோதா மீது ஆளுநர் கருத்தை நிராகரிக்கும் தீர்மானம்: முதல்வர் ஸ்டாலின்

சித்த மருத்துவ பல்கலை. மசோதா மீது ஆளுநர் கருத்தை நிராகரிக்கும் தீர்மானம் பேரவையில் நிறைவேற்றம்

இணையதளச் செய்திப் பிரிவு

சென்னை: தமிழ்நாடு சித்த மருத்துவ பல்கலைக் கழக மசோ மீது ஆளுநர் கூறியிருக்கும் கருத்துகளை நிராகரிப்பது என்ற தீர்மானத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் பேரவையில் முன்மொழிந்த நிலையில், அது ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

சித்த மருத்துவ பல்கலைக்கழக மசோதா பேரவையில் இன்று கொண்டுவரப்பட்டது.

சித்த மருத்துவ பல்கலைக்கழக திருத்த மசோதா தொடர்பாக சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார். அதில், சித்த மருத்துவப் பல்கலை சட்ட முன்வடிவு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான செய்தி ஒன்றை பேரவையில் முன் வைக்கிறேன்.

சித்த மருத்துவ பல்கலைக்கழக திருத்த மசோதா தீர்மானம், ஆளுநருக்கு இணைத்து அனுப்பப்பட்டது. ஆனால், ஆளுநர், அரசமைப்புச் சட்டப்படி வழக்கமான நடைமுறைகளைப் பின்பற்றாமல், இந்த சட்ட முன்வடிவில் உள்ள சில பிரிவுகள் குறித்து தங்கள் கருத்தை தெரிவித்து, பேரவையில் இந்த மசோதாவை அறிமுகப்படுத்தும்போது, தன்னுடைய கருத்துகளையும் தெரிவிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இது அரசியல் சட்டத்துக்கும், சட்ட விதிகளுக்கும் முரணானது, சட்ட முன்வடிவு பேரவையில் விவாதிக்கப்படும்போது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பேரவை உறுப்பினர்களுக்கு மட்டுமே அதில் திருத்தங்களை முன்மொழியவோ விளக்கங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டால் திருத்தங்கள் குறித்து வாக்கெடுப்பு கோரவோ அதிகாரம் உள்ளது.

மசோதா, பேரவையில் நிறைவேற்றப்படும்போது அதன் மீது கருத்துகள் தெரிவிக்கும் அதிகாரம் ஆளுநருக்கு வழங்கப்பட வில்லை. எனவே, சட்ட மசோதா குறித்து ஆளுநர் கூறியிருக்கும் கருத்துகளை இந்த பேரவை ஏற்றுக் கொள்ள இயலாது.

கருத்துகள் அடங்கிய செய்தி அவைக் குறிப்பில் இடம்பெறுவதை மாநில சுயாட்சியின் மீது நம்பிக்கை கொண்ட எந்த உறுப்பினரும் ஏற்க மாட்டார்கள் என்ற காரணத்தால், அந்த கருத்துகளை இங்கே பதிவு செய்ய விரும்பவில்லை என்று கூறினார்.

மேலும், 2025 தமிழ்நாடு சித்த மருத்துவ பல்கலைக் கழக முன்மொழிவை, பேரவையில் ஆளுநர் ஆய்வு செய்யக் கோரி அவர் வைத்த கருத்துகளை பேரவை நிராகரிக்கிறது, அந்த தீர்மானத்தை நான் பேரவையில் முன்மொழிகிறேன் என்று கூறினார். ஆளுநருக்கு எதிராக முதல்வர் முன்மொழிந்த தீர்மானம் பேரவையில் ஒருமனதாக நிறைவேறியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Trump-ஐப் பார்த்து பயப்படுகிறார் மோடி!: Rahul Gandhi | செய்திகள் சில வரிகளில் | 16.10.25

பிக் பாஸ் 9: அடுத்த வார வெளியேற்றத்தில் இருந்து தப்பித்தது யார்?

மெக்சிகோ: 2 புயல்களால் 130 பேர் பலி!

டி20 உலகக் கோப்பைக்கு கடைசி அணியாகத் தகுதிபெற்றது யுஏஇ!

இஸ்ரேல் தாக்குதலில் ஹவுதிகளின் தலைமைத் தளபதி பலி!

SCROLL FOR NEXT