அமைச்சர் மா. சுப்பிரமணியன் Center-Center-Chennai
தமிழ்நாடு

சிகிச்சைக்காக வெளிநாடுகளிலிருந்து தமிழகத்துக்கு 15 லட்சம் பேர் வருகை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தினமணி செய்திச் சேவை

மருத்துவ சிகிச்சை பெற வெளிநாடுகளில் இருந்து ஆண்டுக்கு 15 லட்சம் பேர் தமிழகம் வருகின்றனர் என மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம் சார்பில், "எதிர்கால மருத்துவம் 2.0' பன்னாட்டு மாநாடு நடந்து வருகிறது. இந்த மாநாட்டை வெள்ளிக்கிழமை பார்வையிட்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:

3 நாள்கள் நடைபெறும் மாநாட்டில், 15,000 மாணவர்கள் பங்கேற்றனர். மேலும், 9 நாடுகளைச் சேர்ந்த, 38 சர்வதேச மருத்துவ நிபுணர்கள் பங்கேற்ற, அவசர சிகிச்சை, புற்றுநோய் மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு ஆராய்ச்சி கருத்தரங்குகளும், விரிவான விவாதங்களும் நடந்து வருகிறது. அத்துடன் மருத்துவம் சார்ந்த 46 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில், ரோபோடிக் பேருந்து, எண்டோஸ்கோப் பேருந்து ஆகியவை மாநாட்டில் இடம்பெற்றுள்ளன. இவற்றின் செயல்பாடுகளை மருத்துவ மாணவர்கள் கேட்டறிந்து வருகின்றனர்.

தில்லி எய்ம்ஸ் மருத்துவமனைகளில் உள்ள உபகரணங்கள், தமிழக அரசு மருத்துவமனைகளில் இடம் பெற்றுள்ளன. மருத்துவ சிகிச்சைக்கு இந்தியா வருபவர்களின் 25 சதவீதம் பேர் தமிழகம் வருகின்றனர். அதாவது, ஆண்டுக்கு, 15 லட்சம் பேர் சிகிச்சைக்கு வருகின்றனர் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மகா கூட்டணியில் பிளவு? பிகார் தேர்தலில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தனித்துப் போட்டி!

மொசாம்பிக்: படகு விபத்தில் 3 இந்தியர்கள் பலி, ஒருவர் காயம்

இடஒதுக்கீடு போராட்டத்தால் ஸ்தம்பித்தது தெலங்கானா! கடைகள், பெட்ரோல் பம்ப்கள் அடித்து உடைப்பு!

தீபாவளி அன்பும் ஒளியும்... ஹேலி தாருவாலா!

பார்த்த விழி பார்த்தபடி பூத்து இருக்க... ஷிவானி ஜாதவ்!

SCROLL FOR NEXT