மழை கோப்புப்படம்
தமிழ்நாடு

சென்னை உள்பட தமிழகத்தில் இன்று மழை எப்படி இருக்கும்?

இன்று மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்...

இணையதளச் செய்திப் பிரிவு

சென்னை உள்பட 4 மாவட்டங்களில் இன்று பகலில் விட்டுவிட்டு மழை பெய்யும் என்றும் தென் மாவட்டங்களில் குறிப்பாக நெல்லை மாஞ்சோலை பகுதிகளில் கனமழை இருக்கும் என்றும் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.

இதுபற்றி அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,

"சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பகலில் இடைவெளி விட்டு மழை பெய்யும். இரவு முதல் காலை வரை வழக்கம்போல மழை பெய்யும்.

தென் மாவட்டங்கள்- சிவகங்கை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், மதுரை, தேனி ஆகிய தென் தமிழக மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் நல்ல மழை பெய்யும்.

குறிப்பாக நெல்லை மாவட்டத்தில் உள்ள நாலு முக்கு, ஊத்து போன்ற மாஞ்சோலை பகுதிகளில் நாளையும் அதிக மழைப்பொழிவு இருக்கும். இப்பகுதிகளில் 200 மிமீ மழை பெய்யக்கூடும்.

மேற்கு தமிழ்நாடு - திண்டுக்கல், கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு பகுதிகளில் மழை பொழியும். குன்னூர் மக்கள் எச்சரிக்கையாக இருக்கவும்.

டெல்டா மாவட்டங்கள் - நாகை, தஞ்சாவூர், திருவாரூர், காரைக்கால், மயிலாடுதுறை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்யும்.

நெல்லையில் மஞ்சோலைப் பகுதிகளில் மிக கனமழை இருக்கும்" என்று பதிவிட்டுள்ளார்.

Heavy rain in several districts in tamilnadu

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாதிப் பெயர்களை நீக்குவதில் இறுதி முடிவு கூடாது - நீதிமன்றம் உத்தரவு

எந்த நிலையிலும் உமக்கு மரணமில்லை... கமல் பதிவு!

சூரியனுக்குக் கீழே அத்தனையும்... நமிதா பிரமோத்!

அக். 20 தீபாவளியன்று ஞாயிறு அட்டவணைப்படி புறநகர் ரயில்கள் இயக்கம்!

பூப் பூவாய்ப் பூத்திருக்கு... நிஷா அகர்வால்!

SCROLL FOR NEXT