புதுச்சேரியில் தீபாவளி மறுநாளும் அரசு விடுமுறை என மாநில முதல்வர் என்.ரங்கசாமி அறிவித்தார்.
வருகிற திங்கள்கிழமையில் தீபாவளித் திருநாள் கொண்டாடப்படவுள்ளது. பெரும்பாலும் அரசு அலுவலகங்கள், ஐடி நிறுவனங்களில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை அளிக்கப்படுவதால், மொத்தமாக 3 நாள் விடுமுறை பெறுகின்றனர். இந்த நிலையில், புதுச்சேரியில் தீபாவளி மறுநாளான செவ்வாய்க் கிழமையும் அரசு விடுமுறை அறிவித்து, மாநில முதல்வர் என்.ரங்கசாமி உத்தரவிட்டுள்ளார்.
புதுச்சேரியில் பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், பொதுத் துறை நிறுவனங்களுக்கு செவ்வாய்க் கிழமையிலும் அரசு விடுமுறை அறிவித்திருப்பது மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டிலும் தீபாவளி மறுநாளில் அரசு விடுமுறையை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: தீபாவளி! 4,067 பேருந்துகள் இயக்கம் - இருநாள்களில் 3.5 லட்சம் பேர் பயணம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.