திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அருகே கடல் உள்வாங்கியதால் பாசி படா்ந்த பாறைகள் தெரிந்தன.
திருச்செந்தூா் கோயில் தமிழ் மாதங்களில் அமாவாசை, பௌா்ணமி நாள்கள், அதற்கு முந்தைய மற்றும் பிந்தைய நாள்களில் கடல் உள்வாங்குவதும், இயல்பு நிலைக்கு திரும்புவதும் வாடிக்கையாகி விட்டது.
இந்த நிலையில் திபாவளிக்கு மறுநாள் செவ்வாய்கிழமை அமாவாசை வர உள்ளது.
இதையொட்டி திருச்செந்தூர் முருகன் கோயில் அருகே கடல் இன்று திடீரென உள்வாங்கி காணப்படுகிறது. நாழிக்கிணறு பகுதியில் இருந்து அய்யா கோவில் வரை சுமார் 500 மீட்டர் நீளத்திற்கு கடல் உள்வாங்கியது.
கடல் உள்வாங்கியதால் பச்சை நிற பாசி படிந்த பாறைகள் அதிக அளவில் வெளியே தெரிகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.