தீபாவளி: கோயில்களில் குவிந்த பக்தர்கள்!
தீபாவளி பண்டிகையையொட்டி அதிகாலை முதலே பக்தர்கள் கோயில்களில் குவிந்து வருகின்றனர்.
தீபாவளி பண்டிகையையொட்டி அதிகாலை முதலே பக்தர்கள் கோயில்களில் குவிந்து வருகின்றனர்.
தீபாவளியை கோயிலில் இருந்து தொடங்கும் விதமாக அதிகாலையிலேயே எண்ணெய்க் குளியல் முடித்து மக்கள் கோயிலுக்குச் சென்று வழிபாடு மேற்கொண்டுள்ளனர்.
அதன்பிறகு வீடுகளுக்குச் சென்று பட்டாசு வெடித்தும் இனிப்புகளைப் பகிர்ந்தும் தீபாவளியை உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர்.
Advertisement
Advertisement
குறிப்பாக சென்னையில் வடபழனி முருகன் கோயில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில்களில் அதிக எண்ணிக்கையிலான பக்தர்கள் குவிந்துள்ளனர்.
தீபாவளியையொட்டி கோயில்களில் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. புத்தாடை அணிந்து வந்த பக்தர்கள் காத்திருந்து இறைவனை வழிபட்டுச் சென்றனர்.
இதையும் படிக்க | தீபாவளி: கோயில்களில் குவிந்த பக்தர்கள்!
Diwali: Devotees throng temples
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.