தீபாவளிக்கு ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(அக். 20) சவரனுக்கு ரூ. 640 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.
நிகழாண்டுக்குள் தங்கம் விலை சவரன் ரூ.1 லட்சத்தைத் தொடும் என்ற நிபுணர்களின் கணிப்பை உறுதி செய்யும் வகையில், கடந்த சில நாள்களாக தங்கத்தின் விலையானது காலை, மாலை என இருமுறை உயர்ந்து வருகிறது.
தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், கடந்த வாரத்தில் மட்டும் சவரன் ரூ.5,600 உயர்ந்து வெள்ளிக்கிழமை சவரன் ரூ.97,600-க்கு விற்பனையாகி புதிய உச்சத்தைத் தொட்டது.
வாரத்தின் இறுதி நாளான சனிக்கிழமை தங்கத்தின் விலை குறைந்தது. அதன்படி, கிராமுக்கு ரூ.200 குறைந்து ரூ.12,000-க்கும், சவரனுக்கு ரூ.1,600 குறைந்து ரூ.96,000-க்கும் விற்பனையானது.
இந்த நிலையில், தீபாவளி நாளான இன்று சவரனுக்கு ரூ. 640 குறைந்து ஒரு சவரன் ரூ. 95,360-க்கும் கிராமுக்கு ரூ. 80 குறைந்து ஒரு கிராம் ரூ. 11,920-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேசமயம் வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ. 190-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ, 1,90,000-க்கும் விற்பனையாகிறது.
இதையும் படிக்க: நேர்மறை எண்ணம் நிலவட்டும்: பிரதமரின் தீபாவளி வாழ்த்து!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.