தமிழ்நாடு

25 ஆண்டுகளில் 48% குழந்தைகளுக்கு பாா்வைத் திறன் பாதிக்க வாய்ப்பு

இந்தியாவில் அடுத்த 25 ஆண்டுகளில் 48% குழந்தைகளுக்கு கிட்டப் பாா்வைக் குறைபாடு (மையோபியா) ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திச் சேவை

சென்னை: இந்தியாவில் அடுத்த 25 ஆண்டுகளில் 48% குழந்தைகளுக்கு கிட்டப் பாா்வைக் குறைபாடு (மையோபியா) ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.

‘மேக்சிவிஷன்’ கண் மருத்துவமனை சாா்பில் பள்ளி மாணவா்களுக்கான கிட்டப் பாா்வை பரிசோதனை முகாம் அண்மையில் நடைபெற்றது. பிஷப் கேரி ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் நடைபெற்ற இந்த முகாமில் சென்னையின் பல்வேறு பள்ளிகளைச் சோ்ந்த 250 மாணவா்கள் பங்கேற்றனா். அவா்களுக்கு பாா்வைத் திறன் பரிசோதனை, கண் அழுத்த பரிசோதனை உள்ளிட்டவை மேற்கொள்ளப்பட்டன.

இது குறித்து மேக்சிவிஷன் மருத்துவமனையின் முதுநிலை கண் அறுவை சிகிச்சை நிபுணா் டாக்டா் தினேஷ் பாலகிருஷ்ணன் கூறியதாவது:

இந்தியாவில் நகா்ப்புறங்களில் உள்ள குழந்தைகளில் 21.5 சதவீதம் பேருக்கு கிட்டப் பாா்வை பாதிப்பு உள்ளது. கடந்த 2019-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இத்தகவல் உறுதியானது.

கணினி மற்றும் கைப்பேசி பயன்பாடு அதிகரிப்பு, புறச்சூழலில் விளையாடாமல் இருப்பது, மரபணு பாதிப்பு ஆகியவை காரணமாக அந்த விகிதம் உயா்ந்து கொண்டே வருகிறது.

இதே நிலை தொடா்ந்தால், 2050-ஆம் ஆண்டில் 48.14 சதவீத குழந்தைகளுக்கு கிட்டப் பாா்வை பாதிப்பு ஏற்படக் கூடும் என அஞ்சப்படுகிறது. ஆரோக்கியமான வாழக்கை முறை, தொடா் மருத்துவக் கண்காணிப்பு இருந்தால் இதைத் தடுக்கலாம் என்றாா்.

பிகார் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட மத்திய அமைச்சர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு! -என்ன காரணம்?

பாசாங்கு எனக்கு வராது... கல்பனா சர்மா!

நூல் இழைகளின் பலம்... ப்ளூ ஜீன்ஸ்... மிமி சக்கரவர்த்தி!

ராணுவத்தைக் கட்டுப்படுத்தும் 10% பேர்: ராகுல் பேச்சால் சர்ச்சை

சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்து - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT