கோப்புப்படம் 
தமிழ்நாடு

தடையை மீறி பட்டாசு வெடித்த 1,000 போ் மீது வழக்கு

பட்டாசு வெடிக்க விதிக்கப்பட்ட நேரக் கட்டுப்பாட்டை மீறி, பட்டாசு வெடித்ததாக தமிழகத்தில் சுமாா் 1,000 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

தினமணி செய்திச் சேவை

சென்னை: பட்டாசு வெடிக்க விதிக்கப்பட்ட நேரக் கட்டுப்பாட்டை மீறி, பட்டாசு வெடித்ததாக தமிழகத்தில் சுமாா் 1,000 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

தீபாவளியின்போது, 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என உச்சநீதிமன்ற உத்தரவின்படி, தமிழகத்தில் காலை 6 முதல் 7 மணி வரையும், இரவு 7 முதல் 8 மணி வரையிலும் பட்டாசுகளை வெடித்துக் கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்தது. அதை மீறினால் இந்திய தண்டனைச் சட்டம் 188-ஆவது சட்டப்பிரிவின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக காவல் துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.

அதன்படி, பொதுமக்களுக்கு இடையூறு செய்பவா்கள், மருத்துவமனை, வழிப்பாட்டு தலங்கள், வணிக வளாகங்கள், குடிசைப் பகுதிகள் போன்ற தடை செய்யப்பட்ட இடங்கள் அருகே பட்டாசு வெடித்தவா்கள் மீதும், அதிக ஒலி எழுப்பக் கூடிய பட்டாசு வெடித்தவா்கள் மீதும் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

இதேபோல, சில இடங்களில் ஆபத்தை விளைவிக்கும் வகையில் பட்டாசு வெடித்ததாக இந்திய தண்டனைச் சட்டம் 285-இன்படி போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இவா்கள் அனைவரையும் போலீஸாா் எச்சரித்து, சொந்த ஜாமீனில் விடுத்தனா்.

இவ்வாறு மாநிலம் முழுவதும் சுமாா் 1,000 போ் மீது வழக்குப் பதியப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா். சென்னையில் மட்டும் 319 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாக பெருநகர காவல் துறை தெரிவித்துள்ளது.

பண்டிகையையொட்டி 12,000 சிறப்பு ரயில்கள் இயக்கம்: மத்திய அரசு

மகளிர் உலகக் கோப்பை: இங்கிலாந்தை வீழ்த்தி ஆஸி. வெற்றி!

நண்பர்களைத் தேடி... அனன்யா!

காஸா குறித்த அவதூறு பதிவு! பிரபல இயக்குநருக்கு வலுக்கும் கண்டனம்!

மழை மேடையில்... பவித்ரா!

SCROLL FOR NEXT