முகப்பு
தமிழ்நாடு

அடுத்த 3 மணிநேரத்துக்கு சென்னை, 25 மாவட்டங்களில் மழை!

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்துக்கு 26 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.

Updated On : 22 அக்டோபர், 2025 at 11:21 AM
கோப்புப் படம்
பகிர்:

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்துக்கு 26 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,

தமிழ்நாட்டில் அடுத்த மணிநேரத்துக்கு (இரவு 7 மணி வரை) சென்னை, காஞ்சிபுர்ம், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களின் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

மேலும், கோவை, தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, புதுக்கோட்டை, சேலம், தென்காசி, தஞ்சாவூர், தேனி, நீலகிரி, தூத்துக்குடி, திருச்சி, நெல்லை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, விருதுநகர், புதுச்சேரி ஆகிய மாவட்டங்களின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசானது அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | ஆம்பூரில் விடிய விடிய கனமழை: நிரம்பி வழியும் தடுப்பணை!

summary

Rain chance for 26 districts of tamilnadu

முழு கட்டுரையைப் படிக்க →