மழை EPS
தமிழ்நாடு

அடுத்த 2 மணிநேரம் எங்கெல்லாம் மழை தொடரும்?

அடுத்த 2 மணிநேரம் மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்...

இணையதளச் செய்திப் பிரிவு

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று காலை 10 மணிவரை மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகம், புதுவை உள்ளிட்ட தென்மாநிலங்களில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்று வலுப்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக, தமிழகம் முழுவதும் கடந்த 2 நாள்களாக பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகின்றது. பல்வேறு மாவட்டங்களுக்கு சிவப்பு மற்றும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அடுத்த 3 மணிநேரத்துக்கு மழை பெய்ய வாய்ப்புள்ள இடங்கள் குறித்த தகவலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களிலும் புதுச்சேரியும் காலை 10 மணிவரை மழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Rain will continue for the next 2 hours.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கேரளத்தில் தொடரும் கனமழை! 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்!

ஓடிடியில் வெளியான அதர்வாவின் தணல்!

பிகார் தேர்தல்: தேஜஸ்வி முதல்வர் வேட்பாளரா? காங்கிரஸ் பதில் அளிக்க மறுப்பு

கரூர் சம்பவத்தில் அழுதது நடிப்பா? அன்பில் மகேஸ் பதில் | செய்திகள்: சில வரிகளில் | 22.10.25

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் அசத்தலான படங்கள்!

SCROLL FOR NEXT