சென்னை: வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதையடுத்து, தமிழகத்தில் 9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு சனிக்கிழமை கலை ஏற்றப்பட்டது.
வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்தப் பகுதி இன்று காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகியுள்ளது. இது கடலில், சென்னையில் இருந்து 990 கிலோ மீட்டர் தொலைவில் கிழக்கு- தென் கிழக்கில் நிலை கொண்டுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி அக். 27ஆம் தேதி புயலாக வலுப்பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள ஒன்பது துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தாழ்வு மண்டலம், அக். 27ஆம் தேதி தென் மேற்கு - மத்திய மேற்கு வங்கக் கடலில் புயலாக மாறுகிறது. வடகிழக்குப் பருவமழை காலம் தொடங்கி வங்கக் கடலில் உருவாகும் முதல் புயலானது ஆந்திரத்தை நோக்கி நகரும் என்றும், இதற்கு மொந்தா என்றும் பெயரிடப்பட்டுள்ளது.
புயல் சின்னம் ஆந்திரத்தை நோக்கி நகர்ந்தாலும் வட தமிழக மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.
புயல் சின்னம் காரணமாக கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்பதால் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.