கரூர்: கரூரில் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர், சென்னையில் விஜய்யை சந்திக்க ஞாயிற்றுக்கிழமை காலை கார்களில் புறப்பட்டனர்.
கரூரில் கடந்த மாதம் 27ஆம் தேதி நடைபெற்ற தவெக பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலயாகினர். மேலும் 110 பேர் படுகாயம் அடைந்தனர்.
இந்த நிலையில், நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு விஜய் மூன்று நாள்களுக்குப் பின் காணெலி மூலம் ஆறுதல் கூறினார். அப்போது பாதிக்கப்பட்டவர்களிடம் உங்களை நேரில் வந்து சந்திப்பேன் என்றார். ஆனால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திக்க இயலாத சூழ்நிலை ஏற்பட்டதால் விஜய்யின் தவெக மாநில நிர்வாகிகள் அண்மையில் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று ஆறுதல் கூறியதுடன் விஜய்யுடன் காணொளி காட்சியின் மூலம் பேச வைத்தனர்.
அப்போது விஜய், உங்கள் அனைவரையும் சென்னைக்கு நேரில் வரவழைத்து உங்களை விரைவில் சந்திப்பேன் என்று தெரிவித்திருந்தார். அதன்படி நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சென்னைக்கு அழைத்துச் செல்லும் வகையில் ஏற்பாடு செய்யும் பணிகளை தவெக நிர்வாகிகள் கடந்த சில நாள்களாக ஈடுபட்டு வந்தனர்.
இதையடுத்து சென்னை மாமல்லபுரத்தில் பாதிக்கப்பட்டவர்களை திங்கள்கிழமை நேரில் சந்திக்கும் வகையில் விஜய்யின் கட்சி நிர்வாகிகள் ஏற்பாடு செய்ததையடுத்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதலே கட்சியின் தொண்டர்கள் மற்றும் கட்சியின் வழக்குரைஞர்கள் தங்களது கார்களில் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று, அவர்களை கரூர் வெண்ணைமலையில் உள்ள ஒரு அரங்கில் தங்க வைத்து அங்கு அவர்களுக்கு உணவு வழங்கிய பின் அங்கிருந்து இரண்டு பேருந்துகளில் சென்னைக்கு காலையில் அழைத்துச் செல்லப்பட்டனர்.
அவர்கள் திங்கள்கிழமை காலை விஜய் தலைமையில் நடைபெறும் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் விஜய்யை சந்திக்கும் நிகழ்ச்சிக்கு அழைத்துச் செல்வதை தவெக நிர்வாகிகள் ரகசியமாக வைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: சொல்லப் போனால்... ஊழல் ஒழிப்பும் பிஎம்டபிள்யூ கார்களும்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.