மேட்டூர் அணை நிலவரம்!
மேட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு குறைப்பு.
தமிழ்நாடுமேட்டூர் அணை நிலவரம்!
மேட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு குறைப்பு.
மேட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு விநாடிக்கு 35,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 45,000 கன அடியிலிருந்து, 35,000 கன அடியாக குறைக்கப்பட்டது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும் நீர் இருப்பு 93.47 டிஎம்சியாகவும் உள்ளது.
அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 35,000 கன அடியாக குறைந்தது.
அணையில் இருந்து நீர் மின் நிலையங்கள் வழியாக விநாடிக்கு 22,300 கன அடி நீரும் உபரி நீர் போக்கி வழியாக விநாடிக்கு 12,700 கன அடி நீரும் மேல்மட்ட மதங்கள் வழியாக கிழக்கு - மேற்கு கால்வாய் பாசனத்திற்கு விநாடிக்கு 500 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிக்க: அதானி குழும பங்குகளில் முதலீடு செய்ய எல்ஐசி-க்கு அழுத்தம்?