மேட்டூர் அணை நிலவரம்!
மேட்டூர் அணை நிலவரம் தொடர்பாக...
மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 6,000 கன அடியிலிருக்கு வினாடிக்கு 5,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.
காவிரி டெல்டா மாவட்டங்களில் பாசன தேவை குறைந்ததாலும் நாளை(ஜன. 28) மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்படும் என்பதாலும் மேட்டூர் அணை நீர் திறப்பு படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது.
திறக்கப்படும் நீரின் அளவு நேற்று(ஜன. 26) காலை விநாடிக்கு 7,000 கன அடியிலிருந்து விநாடிக்கு 6,000கன அடியாகவும் இன்று(ஜன. 27) காலை விநாடிக்கு 5,000 கன அடியாகவும் குறைக்கப்பட்டது.
Advertisement
Advertisement
அணைக்கு வரும் நீரில் அளவு விநாடிக்கு 47 கன அடியிலிருந்து வினாடிக்கு 26 கன அடியாக குறைந்தது.
அணையின் நீர்மட்டம் 93.18 அடியாக குறைந்தது. நீர் இருப்பு 56.36 டிஎம்சியாக உள்ளது.