செயற்கைக் கோள் புகைப்படம் 
தமிழ்நாடு

மணிக்கு 15 கி.மீ. வேகத்தில் நகரும் மோந்தா புயல்! சென்னையில் படிப்படியாக மழை அதிகரிக்கும்!!

மணிக்கு 15 கி.மீ. வேகத்தில் நகரும் மோந்தா புயல் காரணமாக சென்னையில் படிப்படியாக மழை அதிகரிக்கும்!!

இணையதளச் செய்திப் பிரிவு

வங்கக் கடலில் உருவாகியிருக்கும் மோந்தா புயல் அக்டோபர் 28ஆம் தேதி காலைக்குள் தீவிர புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது.

வங்கக் கடலில் இந்த புயலானது கடந்த 6 மணி நேரமாக மணிக்கு 15 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. இதன் காரணமாக, சென்னையில் படிப்படியாக மழை அதிகரிக்கும் என்ற கூறப்படுகறிது.

தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடலில் கடந்த ஆறு மணி நேரமாக மணிக்கு 15 கிமீ வேகத்தில் புயலானது வடமேற்கு நோக்கி நகர்ந்து, மேற்கு மத்திய மற்றும் தென்கிழக்கு வங்கக் கடலில், இன்று காலை 5.30 மணிக்கு மையம் கொண்டிருந்தது. இது அக். 28ஆம் தேதி காலை தீவிரப் புயலாக வலுப்பெறும்.

காக்கிநாடாவுக்கு 620 கிலோ மீட்டர் தொலைவிலும், விசாகப்பட்டினத்துக்கு 650 கிலோ மீட்டர் தொலைவிலும் சென்னைக்கு 500 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலைகொண்டிருந்தது.

இதன் காரணமாக, காக்கிநாடா, கோனசீமா, மேற்கு கோதாவரி, கிருஷ்ணா, பபட்லா, பிரகாசம், நெல்லூர் மாவட்டங்களில் கனமழை முதல் மிகக் கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் பரவலாக மழை மிதமான பெய்யத் தொடங்கியிருக்கிறது. வரக்கூடிய மணி நேரங்களில் படிப்படியாக மழை அதிகரிக்கும் என்றும் அடுத்த 24 மணி நேரத்தில் பலத்த மழைக்கும் வாய்ப்பிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்யலாம் என்றும், ஒரு சில இடங்களில் மித கனமழை பெய்யலாம் என்றும், சென்னையில் தென் சென்னையை விடவும் வட சென்னைப் பகுதிகள் அதிக மழைப் பொழிவையும் நாள் முழுவதும் மழையும் பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடற்கரையிலிருந்து 2 கிலோ மீட்டர் சுற்றுவட்டாரத்தில் உள்ள பகுதிகளுக்கு 50 - 70 மி.மீ. மழை பெய்யலாம் என்றும் கனமழை பெய்தாலும், வரலாறு காணாத மழை போன்றோ, வெள்ளம் ஏற்படுவதற்கான வாய்ப்புகளோ இல்லை என்று கூறப்படுகிறது.

மேலும், விழுப்புரம் முதல் கன்னியாகுமரி வரை மழைக்கு வாய்ப்பில்லை என்றாலும் கடல் சீற்றத்துடன் காணப்படும் என்பதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

கடல் கொந்தளிப்புடன் இருக்கும் என்பதால் நான்கு நாள்களுக்கு மீனவர்கள் கடலுக்குச் செல்லக் கூடாது. திருச்செந்தூரில் இன்று மாலை கடல் கொந்தளிப்புடன் இருக்கும் என்பதால் சூரசம்ஹாரம் முடிந்து கடலில் புனித நீராடக் கூடிய மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும், கடலில் இறங்குவதை தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மின்னலைப் பிடித்து... கௌஷானி!

ஸ்ரீ சாயி மார்க்கம் தீபாவளி மலர் 2025

வங்கதேச வரைபடத்தில் இந்திய மாநிலங்கள்? பாகிஸ்தானுக்கு பரிசளித்த புத்தகத்தால் சர்ச்சை!

செவப்புச் சேல... அங்கனா ராய்!

வெள்ளக்கோவில் நிதி நிறுவன உரிமையாளர் கொலை வழக்கு: நிலத்தரகர் கைது

SCROLL FOR NEXT