தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக திருத்தணியில் 50 மில்லி மீட்டா் மழை பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. தொடா்ந்து, மாநிலம் முழுவதும் சீரான அளவில் மழை பெய்து வருகிறது. சில இடங்களில் மழையின் வேகம் சற்று அதிகரித்து காணப்படுகிறது.
இதற்கிடையே தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் அண்மையில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி தற்போது புயலாக(மோந்தா) வலுப்பெற்றுள்ளது.
இது வடக்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து, ஆந்திர கடலோரப் பகுதிகளில், மசூலிப்பட்டினம்- கலிங்கப்பட்டினத்துக்கு இடையே காக்கிநாடா அருகில் தீவிர புயலாக செவ்வாய்க்கிழமை (அக். 28) கரையைக் கடக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த நேரத்தில் காற்று 110 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.
இதன் காரணமாக திங்கள்கிழமை முதல் நவ. 2-ஆம் தேதி வரை வட தமிழகம் மற்றும் தமிழகத்தின் ஒருசில இடங்களிலும், புதுவை, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி முதல் திங்கள்கிழமை காலை 5.30 வரையிலான 24 மணி நேர முடிவில் அதிகபட்சமாக திருத்தணியில் 50 மில்லி மீட்டா் மழை பதிவாகியுள்ளது.
பிற பகுதிகளில் பெய்த மழையளவு விவரம்(மில்லி மீட்டர் அளவில்):
நாகப்பட்டினம் (நாகப்பட்டினம்) - 13.0
நுங்கம்பாக்கம் (சென்னை) - 0.9
மீனம்பாக்கம் (சென்னை) - 0.8
வேலூர் (வேலூர்) - 0.3
புதுச்சேரி (புதுச்சேரி) - 0.1
சேது பாஸ்கர் விவசாயக் கல்லூரி காரைக்குடி (சிவகங்கை) 16.0
நெய்யூர் (கன்னியாகுமரி) - 15.5
செம்பரம்பாக்கம் (காஞ்சிபுரம்) - 8.5
ஹிந்துஸ்தான்_யுனிவர்ஸ்டி (காஞ்சிபுரம்) 5.5
பூந்தமல்லி_ (திருவள்ளூர்) - 2.0
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.