சென்னை: வங்கக் கடலில் உருவாகியிருக்கும் மோந்தா புயலானது அக். 28 மாலை அல்லது இரவில் ஆந்திர மாநிலத்தில் கரையை கடக்கும் நிலையில், 8 மாவட்டங்களுக்கு இன்று கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் சென்னைக்கு சுமார் 500 கிலோ மீட்டர் தொலைவில் நிலைகொண்டிருக்கும் மோந்தா புயலானது, மணிக்கு 15 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது.
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் இன்று காலை முதலே பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது. இது படிப்படியாக உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொந்தா புயல் ஆந்திரம் நோக்கி நகர்ந்து வரும் நிலையில் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இன்றும் நாளையும் ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மாவட்டங்களில் மிக கனமழையும், வேலூர், திருவண்ணாமலை விழுப்புரம், கடலூர், நீலகிரி, கோவை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழையும் பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், நீலகிரி, கோவை என 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 8 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யும் என்றும், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களிலும்,
தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது.
நாளை திருவள்ளூரில் மிக கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிக்க.. பிரதமர் மோடி புனித நீராட செயற்கை யமுனை! கட்சிகள் விமர்சனம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.