சென்னை மாமல்லபுரத்தில் திமுக பயிற்சி கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
மாமல்லபுரம் ஈசிஆர் சாலையில் உள்ள 'கான்ஃப்ளூயன்ஸ் ஹாலில் திமுக பயிற்சி கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக மூத்த தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
திமுக தலைவர் திட்டமிடலின்படி வருகின்ற சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் பல்வேறு முன்னெடுப்புகளை கட்சி மேற்கொண்டு வருகிறது.
"தமிழ்நாடு தலைகுனியாது" என்ற பரப்புரையை திமுக தொடங்கவுள்ளது. அதன் ஒருபகுதியாக ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் திமுகவின் வெற்றியை உறுதி செய்யும் வகையில், முதலமைச்சர், திமுக தலைவர் தலைமையில் "என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி" என்ற முன்னெடுப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
திமுக மாவட்ட செயலாளர்கள் - மாநிலங்களவை மற்றும் மக்களவை உறுப்பினர்கள் - சட்டமன்ற உறுப்பினர்கள் - தொகுதி பார்வையாளர்கள் - தலைமை செயற்குழு உறுப்பினர்கள் - ஒன்றிய, நகர, பகுதி, பேரூர்க் கழக செயலாளர்களுக்கான திமுக பயிற்சிக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.