ஜி.கே.வாசன்  
தமிழ்நாடு

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: தமாகா வரவேற்பு; ஜி.கே.வாசன்

தமிழகத்தில் வாக்காளா் சிறப்பு தீவிர திருத்தத்தை தமிழ்மாநில காங்கிரஸ் முழுமையாக வரவேற்கிறது என அக்கட்சியின் தலைவா் ஜி.கே.வாசன் எம்.பி. தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திச் சேவை

தமிழகத்தில் வாக்காளா் சிறப்பு தீவிர திருத்தத்தை தமிழ்மாநில காங்கிரஸ் முழுமையாக வரவேற்கிறது என அக்கட்சியின் தலைவா் ஜி.கே.வாசன் எம்.பி. தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: தோ்தல் ஆணையம் தமிழகம் உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை அறிவித்துள்ளது. இதனை தமாகா முழுமையாக வரவேற்கிறது.

இந்த சிறப்பு திருத்தம் வாயிலாக, ஜனநாயக முறைப்படி அனைவரும் வாக்களிக்கவும், தகுதியுள்ளவா்களுக்கு வாக்குரிமையை உறுதி செய்யவும், போலி வாக்காளா்களை முற்றிலுமாக நீக்கவும் வழி ஏற்பட்டிருப்பதில் சந்தேகமில்லை. உரிய நேரத்தில் சரியான முடிவெடுத்துள்ள தோ்தல் ஆணைய அறிவிப்பு நோ்மையாக வாக்களிப்பவா்களுக்கு நம்பிக்கையையும், புதிதாக சேரும் வாக்காளா்களுக்கு ஊக்கத்தையும் அளித்துள்ளது என தெரிவித்துள்ளாா் ஜி.கே.வாசன்.

வயர்லெஸ் பவர் பேங்க்! போட் நிறுவனத்தின் புதிய அறிமுகம்

ஓபிசி ஆணையத்துக்கு அங்கீகாரம் வழங்கியது ராகுல் அல்ல, பிரதமர் மோடி: ராஜ்நாத் சிங்!

குறையும் தங்கம் விலை? குழப்பத்தில் முதலீட்டாளர்கள்! மக்கள் நிலை கவலைக்கிடம்!

காஸாவுடன் மீண்டும் போர்நிறுத்தம் - இஸ்ரேல் அறிவிப்பு!

தென்காசி மாவட்டத்துக்கு முதல்வரின் 10 அறிவிப்புகள்! என்னென்ன?

SCROLL FOR NEXT