ஜாய் கிரிசில்டா விவகாரம் தொடர்பாக மாதம்பட்டி ரங்கராஜின் முதல் மனைவி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
‘மெஹந்தி சர்க்கஸ்’ படத்தின் மூலம் பிரபலமானவர் மாதம்பட்டி ரங்கராஜ். அரசியல், திரைப் பிரபலங்கள் வீட்டு விஷேசங்களுக்கு சமைப்பதில் மிகவும் பிரபலமான இவர் தனியார் தொலைக்காட்சியின் சமையல் நிகழ்ச்சியிலும் பங்குபெற்று வருகிறார்.
இவருக்கு ஸ்ருதி என்பவருடன் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இதற்கிடையில், தனது முதல் மனைவியை விவாகரத்து செய்யாமலே, ஆடை வடிவமைப்புக் கலைஞர் ஜாய் கிரிசில்டாவை சட்டத்திற்கு புறம்பாக இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், ஜாய்கிரிசில்டா நிறைமாத கர்ப்பிணியாகவும் உள்ளார்.
இதனை மறுத்திருந்த மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஜாய்கிரிசில்டா புகாரளித்துள்ள நிலையில், வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஜாய் கிரிசில்டா இருவரும் மாறி மாறி தங்களின் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
திருமணம் செய்து கொள்வதாகக் கூறி கர்ப்பமாக்கி ஏமாற்றி விட்டதாக நடிகரும், சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஆடை வடிவமைப்புக் கலைஞர் ஜாய் கிரிசில்டா தொடர்ந்து புகாரளித்து வரும் நிலையில், இதுதொடர்பாக மாதம்பட்டி ரங்கராஜின் மனைவி ஸ்ருதி இன்ஸ்டாகிராமில் மனம் திறந்து பதிவிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில், “என் மீது கருணை காட்டிய அனைவருக்கும் நன்றியுள்ளவராக இருக்க விரும்புகிறேன். நானும் எனது குழந்தையும் என்னென்ன பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகிறோம் என தெரியாமல் பலரும் விமர்சித்து வருகின்றனர். என்னை விமர்சிப்பவர்களுக்கும் மரியாதையுடன் பதிலளிக்க, என்னுடைய அறிவு கற்றுக் கொடுத்துள்ளது.
ஒவ்வொரு குடும்பமும் உள்ளேயும், வெளியேயும் பல பிரச்சினைகளை எதிர்கொள்கிறது. ஆனாலும், நாங்கள் அந்தப் பிரச்சினைகளை சமாளிக்க முடிகிறது. ஒற்றுமையே பலம்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.