தவெக விஜய் 
தமிழ்நாடு

பிரசாரம் தொடருமா? அதிமுகவுடன் கூட்டணியா? தவெக விளக்கம்!

அதிமுகவுடன் கூட்டணி தொடர்பான கேள்விக்கு தவெக இணை பொதுச் செயலாளர் நிர்மல்குமார் பதில்.

இணையதளச் செய்திப் பிரிவு

அதிமுகவுடன் கூட்டணியா? தவெக மீண்டும் பிரசாரம் மேற்கொள்ளுமா? உள்ளிட்ட கேள்விகளுக்கு தவெக இணைப் பொதுச் செயலாளர் நிர்மல்குமார் பதில் அளித்துள்ளார்.

தவெகவில் புதிய நிர்வாகிகளை நியமித்து விஜய் நேற்று (அக். 28) உத்தரவிட்டிருந்தார். இதனால், புதிய நிர்வாகக் குழு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகக் குழு கூட்டம் இன்று பனையூரில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்குப் பின்னர் தவெக இணைப் பொதுச் செயலாளர் நிர்மல்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் பேசுகையில், “முதல் நிர்வாகக் குழு கூட்டம் தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் தலைமையில் நடைபெற்றது. எதிர்வரும் பேரவைத் தேர்தல் பணிகள், அடுத்தக்கட்ட கட்சிப் பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

கரூர் சம்பவம் நடந்த நாளன்று தவெக நிர்வாகிகள் தாக்கப்பட்டு, வெளியேற்றப்பட்டார்கள். எங்கள் கட்சியை முடக்கும் எண்ணம் நிறைவேறாது. மக்கள் எங்கள் தலைவர் மீது முழு நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்.

41 பேருடைய மரணம் எங்களை கடுமையாக பாதிக்கிறது, நீதிமன்றம் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட பின்னர், பிரசாரம் தொடரும். சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அழைப்பு இல்லை” என்றார்.

அதிமுகவுடன் கூட்டணி குறித்த கேள்விக்கு, “தவெகவின் கூட்டணி நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு மாதத்திற்கு முன்பு இருந்த நிலைப்பாட்டில்தான் இப்போதும் இருக்கிறோம்” என்றார்.

tvk General Secretary Nirmal Kumar responded to a question regarding the alliance with AIADMK.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பழனி செல்ல மாலை அணிந்த பக்தா்கள்

கஞ்சா கடத்தல் வழக்கில் மேலும் ஒருவா் கைது

நீதிமன்ற ஆவணங்களைப் புகைப்படம் எடுத்ததாக புகாா்: போலீஸாா் விசாரணை

யாசகம் கேட்டவர் கொலை: இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை

மணல் கடத்தியவா் கைது

SCROLL FOR NEXT